
என்னது! சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு மாறுகிறாரா? இன்ஸ்டாகிராம் பதிவால் கிளம்பிய வதந்தி
செய்தி முன்னோட்டம்
ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனின் இன்ஸ்டாகிராம் பதிவால், அவர் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு (சிஎஸ்கே) மாறுவதற்கான வாய்ப்பு குறித்து ரசிகர்களிடையே ஊகங்கள் கிளம்பியுள்ளன.
சஞ்சு சாம்சன் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில், "நகர வேண்டிய நேரம்..!!!" என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் கீழே மஞ்சள் நிறக் கோடு தெரியுவதால், அவர் ராஜஸ்தான் ராயல்ஸில் இருந்து நகர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் பக்கம் வரலாம் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வதந்தி வேகமாக சமூக ஊடகங்களில் பரவினாலும், அவர் சிஎஸ்கேவிற்கு செல்லவேண்டும் என்றால் இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன.
வழிகள்
சிஎஸ்கே சஞ்சு சாம்சனை வாங்குவதற்கான வழிகள்
ஒன்று சிஎஸ்கே அணி ஆர்ஆர் உடன் வர்த்தகம் செய்ய பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் அல்லது ஆர்ஆர் அவரை விடுவித்தால், ஐபிஎல் 2026 ஏலத்தில் அவரை வாங்க வேண்டும்.
இதற்கிடையே, சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸுடன் நீண்டகால உறவைக் கொண்டுள்ளார்.
2012 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் தனது ஐபிஎல் பயணத்தைத் தொடங்கிய பிறகு (அறிமுகமாகவே இல்லாமல்), அவர் 2013 இல் ஆர்ஆரில் சேர்ந்து 2015 வரை விளையாடினார்.
2018 இல் ஆர்ஆரால் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன்பு டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் இரண்டு சீசன்களைக் கழித்தார்.
2021 இல் அவர் ஆர்ஆர் அணியில் இணைந்ததோடு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார் மற்றும் ஐபிஎல் 2022 இல் ஆர்ஆரை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.