Page Loader
ஐபிஎல்லில் 150 போட்டிகளில் விளையாடிய 25வது வீரர்! புதிய மைல்கல்லை எட்டிய சஞ்சு சாம்சன்!

ஐபிஎல்லில் 150 போட்டிகளில் விளையாடிய 25வது வீரர்! புதிய மைல்கல்லை எட்டிய சஞ்சு சாம்சன்!

எழுதியவர் Sekar Chinnappan
May 11, 2023
07:58 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2023 தொடரின் 56வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் பங்கேற்றதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ஐபிஎல்லில் 150 போட்டிகளில் விளையாடிய 25வது வீரர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மட்டும் 122 போட்டிகளில் விளையாடியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 100 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய இரண்டு வீரர்களில் சஞ்சு சாம்சனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் அஜிங்க்யா ரஹானே மட்டுமே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 100 போட்டிகளில் விளையாடி இருந்தார்.

sanju samson ipl numbers

ஐபிஎல்லில் சஞ்சு சாம்சன் புள்ளிவிபரம்

தற்போதைய நிலவரப்படி, சஞ்சு சாம்சன் ஐபிஎல்லில் 29.26 என்ற சராசரியுடன் 137.07 ஸ்ட்ரைக் ரேட்டில் 3,834 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 3 சதங்கள் மற்றும் 20 அரைசதங்களும் அடங்கும். மேலும் ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 3,000 ரன்களை கடந்த ஒரே வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் கொண்டுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 117 இன்னிங்ஸ்களில் 29.78 என்ற சராசரியில் 3,157 ரன்கள் எடுத்துள்ளார். இந்த எண்ணிக்கையில் இரண்டு சதங்கள் மற்றும் 17 அரைசதங்கள் அடங்கும். மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சஞ்சு சாம்சன் 249 பவுண்டரிகள் மற்றும் 150 சிக்சர்களை விளாசியுள்ளார். இந்த பட்டியலில் அஜிங்க்யா ரஹானே 2,810 ரன்களுடன் அவருக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.