Page Loader
SAFF U-17 மகளிர் சாம்பியன்ஷிப் : நேபாளத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
SAFF U-17 மகளிர் சாம்பியன்ஷிப் தொடக்க ஆட்டத்தில் நேபாளத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

SAFF U-17 மகளிர் சாம்பியன்ஷிப் : நேபாளத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

எழுதியவர் Sekar Chinnappan
Mar 21, 2023
10:34 am

செய்தி முன்னோட்டம்

திங்களன்று (மார்ச் 20) நடைபெற்ற SAFF U-17 மகளிர் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நேபாளத்தை 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது. போட்டி தொடங்கியது முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. இந்திய அணியின் ஷில்ஜி ஷாஜி 10வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். தொடர்ந்து இந்திய அணி ஆதிக்கம் செலுத்திய நிலையில், போட்டியின் இரண்டாவது பாதியில் ஷில்ஜி ஷாஜி மேலும் 2 கோல்களும் பூஜா ஒரு கோலும் அடித்த நிலையில், நேபாளமும் ஒரு கோல் அடித்தது. இதன் மூலம் இறுதியில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வென்று வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

இந்தியா அபார வெற்றி