Page Loader
இந்திய அணியின் புதிய தலைமை தேர்வாளர் அகர்கருக்கு விருந்தளித்த சச்சின்
இந்திய அணியின் புதிய தலைமை தேர்வாளர் அகர்கருக்கு விருந்தளித்த சச்சின்

இந்திய அணியின் புதிய தலைமை தேர்வாளர் அகர்கருக்கு விருந்தளித்த சச்சின்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 06, 2023
11:45 am

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக அஜித் அகர்கர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், சச்சின் டெண்டுல்கர் அவருக்கு விருந்து வைத்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 4) சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங் மற்றும் அஜித் அகர்கர் லண்டனில் ஒன்றாக சந்தித்து உணவருந்தியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, "நட்பு மற்றும் உணவு எங்களை நெருக்கமாக வைத்திருக்கும் இரண்டு விஷயங்கள்." எனத் தெரிவித்துள்ளார். இந்த பதிவை பார்த்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா, "நீங்கள் அதிர்ஷ்டசாலி!! எனது கோல்ப் நண்பர்கள் மகிழ்ச்சியடைவார்கள்." என்று பதிலளித்துள்ளார்.

ajit agarkar numbers in indian cricket

ஆல்ரவுண்டர் அஜித் அகர்கரின் பின்னணி

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஆல்ரவுண்டர் அஜித் அகர்கர் செவ்வாய்க்கிழமை (ஜூலை 4) நியமிக்கப்பட்டுள்ளார். அஜித் அகர்கர் உள்நாட்டு போட்டிகளில் 110 முதல்தர, 270 லிஸ்ட் ஏ மற்றும் 62 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் 26 டெஸ்ட், 191 ஒருநாள் மற்றும் நான்கு டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2007 இல், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையின் தொடக்க சீசனில் வெற்றிபெற்ற இந்திய அணியின் ஒரு பகுதியாக இருந்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் 2000ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 21 பந்துகளில் இவர் அடித்த அரைசதம் தான் தற்போதுவரை இந்திய வீரர் ஒருவரின் ஒருநாள் கிரிக்கெட் அதிவேக அரைசதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.