
மகாராஷ்டிரா பிரீமியர் லீக் 2023 : சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் புனே அணியில் ஒப்பந்தம்!
செய்தி முன்னோட்டம்
மகாராஷ்டிரா பிரீமியர் லீக் 2023 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் புனே அணியில் இடம் பெற்றுள்ளார்.
இதே போல் கோலாப்பூர் அணியில் மூத்த பேட்டிங் ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவும், நாசிக் அணியில் ராகுல் திரிபாதியும், சம்பாஜிநகர் அணியில் ராஜ்வர்தன் ஹங்கர்கேகரும், ரத்னகிரி அணியில் ஆசிம் காசியும், சோலாப்பூர் அணியில் விக்கி ஓஸ்வாலும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த போட்டியில் ஆறு அணிகள் பங்கேற்கின்றன.
போட்டி ஜூன் 15 ஆம் தேதி தொடங்கும். மேலும் அனைத்து போட்டிகளும் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும்.
ஐபிஎல் வெற்றியைத் தொடர்ந்து பல மாநிலங்களிலும் மாநில அளவிலான கிரிக்கெட் லீக் போட்டிகள் தொடங்கப்பட்டு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
மகாராஷ்டிரா பிரீமியர் லீக் 2023
Maharashtra Premier League is set to be held from the 15th of June 🏏#MaharashtraPremierLeague #RuturajGaikwad #RahulTripathi #RajvardhanHangargekar pic.twitter.com/UwNRqK53nk
— InsideSport (@InsideSportIND) June 5, 2023