ஐபிஎல்: 200 விக்கெட்டுகளை எடுத்து சாதனை புரிந்த சாஹலுக்கு ஆர்ஆர் அணி செய்த சிறப்பு மரியாதை
ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையை அடைந்த யுஸ்வேந்திர சாஹலுக்கு, அவரின் ராஜஸ்தான் அணி சிறப்பு மரியாதை செய்துள்ளது. நேற்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான போட்டியின் போது சாஹல் இந்த மிகப்பெரிய மைல்கல்லை எட்டினார். அதனை தொடர்ந்து RR அணி அவர்களின் எக்ஸ் பக்கத்தில், 'சாஹல் எங்களுக்காக விளையாடுகிறார்' என்று பெருமையுடன் அவர்களின் பயோவை மாற்றியுள்ளது. தங்கள் வீரர்களின் மைல்கற்களைக் கொண்டாடும் மற்ற எல்லா அணிகளையும் போலவே, RR தங்கள் நட்சத்திர பந்துவீச்சாளருக்காக ஒரு இடுகையை ட்வீட் செய்தது மட்டுமின்றி, அவருக்காக தங்கள் பயோ-வையே மாற்றி புதுப்பித்துள்ளது.
யுஸ்வேந்திர சாஹல் சாதனை
"People throw stones at you, and you convert them into milestones." - Sachin Tendulkar pic.twitter.com/5v5dtSj3He— Rajasthan Royals (@rajasthanroyals) April 22, 2024
யுஸ்வேந்திர சாஹல் சாதனை
Behind all the entertainment off the field, there's an IPL GOAT we couldn't be more proud of. Yuzi bhai, we love you. 💗 pic.twitter.com/ubtKslNji4— Rajasthan Royals (@rajasthanroyals) April 22, 2024