'தேவைப்பட்டால் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட தயார்' : ரோஹித் ஷர்மா
செய்தி முன்னோட்டம்
தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், தேவைப்பட்டால் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் அணி களமிறங்கும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 2) இலங்கைக்கு எதிரான இந்திய அணியின் போட்டிக்கு முன்னதாக ரோஹித் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
கணுக்கால் காயம் காரணமாக துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா போட்டியில் இருந்து வெளியேறியதால், அணியின் விளையாடும் லெவனைப் பொறுத்தவரை இந்தியா இதுவரை பெரிய அளவில் மாற்றம் செய்யவில்லை.
மீதமுள்ள ஆட்டங்களில் விளையாடுவதற்கு ஹர்திக் தகுதியானவராக இருந்தாலும், அணி வெவ்வேறு வீரர்களை முயற்சிக்க தயாராக உள்ளது என்று ரோஹித் தெரிவித்துள்ளார்.
Rohit Sharma says ready to play with 3 spinner
ரோஹித் ஷர்மா பேசியதன் முழு விபரம்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, "எல்லா வகையான காம்பினேஷனும் சாத்தியம்.
தேவைப்பட்டால், மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் நாங்கள் விளையாட முடியும். இந்த போட்டியில் ஸ்பின்னர்கள் தான் மிடில் ஓவர்களில் ரன் ஓட்டத்தை நிறுத்துகிறார்கள் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
ஹர்திக் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சூழ்நிலைக்கு ஏற்ப நாங்கள் மூன்று ஸ்பின்னர்களை விளையாட வைக்க வேண்டும் என்றால், அதை செய்வோம். " என்று கூறினார்.
பந்துவீச்சாளர்கள், குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களின் பணிச்சுமை குறித்து பேசிய ரோஹித், வீரர்கள் சிறப்பான நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நடப்பு உலகக்கோப்பையைப் பொறுத்தவரை, இந்திய அணி மட்டுமே இதுவரை தோல்வியையே சந்திக்காத அணியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.