Page Loader
மணிக்கு 216 கிமீ வேகத்தில் பைக்கில் பறந்த ரோஹித் ஷர்மா; பரபரப்பு தகவல்
மணிக்கு 216 கிமீ வேகத்தில் பைக்கில் பறந்த ரோஹித் ஷர்மா

மணிக்கு 216 கிமீ வேகத்தில் பைக்கில் பறந்த ரோஹித் ஷர்மா; பரபரப்பு தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 19, 2023
04:15 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மும்பை-புனே விரைவுச்சாலையில், தனது லம்போர்கினி பைக்கில் மணிக்கு 200 கிமீ வேகத்திற்கும் மேல் பயணித்த தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் இருந்த ரோஹித் ஷர்மா, வியாழக்கிழமை வங்கதேச அணிக்கு எதிராக ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் பங்கேற்க அணி வீரர்களுடன் பேருந்தில் பயணிக்காமல், தனது லம்போர்கினி பைக்கில் சென்றதாக ஊடக அறிக்கைகள் வெளியாகி உள்ளன. மேலும், மும்பை-புனே விரைவுச்சாலையில் மணிக்கு 200 கிமீ வேகத்தில் ரோஹித் ஷர்மா சென்றதாகவும், உச்சபட்சமாக ஒரு கட்டத்தில் 216 கிமீ வேகத்தை தொட்டார் என்றும் கூறப்படுகிறது.

Rohit Sharma flew at 216 kmhr speed in bike

போக்குவரத்து காவல்துறை ரோஹித் ஷர்மாவுக்கு அட்வைஸ்

ரோஹித் ஷர்மா நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்றது குறித்து அறிந்த போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், அவர் போலீஸ் துணையுடன் வீரர்கள் பயணிக்கும் பேருந்தில் பயணிக்க பரிந்துரைத்தனர். இதற்கிடையே, ஒருநாள் உலகக்கோப்பையை பொறுத்தவரை ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் போட்டித் தொடக்க ஆட்டத்தில் பேட்டிங்கில் ரோஹித் ஷர்மா ஏமாற்றமளித்தாலும், அதன் பிறகு முழு ஃபார்மிற்கு திரும்பினார். ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான அடுத்த இரண்டு ஆட்டங்களில் ஒரு சதம் மற்றும் அரை சதத்தை அடித்துள்ளார்.