Page Loader
மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோஹித், கோலி விளையாடுவார்களா? ராகுல் டிராவிட் பதில்
ரோஹித் ஷர்மா, விராட் கோலிக்கு ஓய்வளித்தது குறித்து ராகுல் டிராவிட் விளக்கம்

மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோஹித், கோலி விளையாடுவார்களா? ராகுல் டிராவிட் பதில்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 31, 2023
11:37 am

செய்தி முன்னோட்டம்

சனிக்கிழமை (ஜூலை 29) பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்தியா படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 182 ரன்கள் எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 36.4 ஓவர்களில் இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ரோஹித் மற்றும் கோலி போன்ற மூத்த வீரர்கள் இல்லாததே தோல்விக்கு காரணம் என விமர்சிக்கப்பட்ட நிலையில், ராகுல் டிராவிட் விளக்கம் அளித்துள்ளார்.

rahul dravid says experiment will continue

மூத்த வீரர்களுக்கு ஓய்வளித்ததை ஆதரிக்கும் ராகுல் டிராவிட் 

போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ரோஹித் மற்றும் விராட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கும் முடிவை ஆதரித்தார். விரைவில் வரவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை காரணமாக வரும் ஆட்டங்களில் அணித் தேர்வில் இந்தியா இதேபோன்ற உத்தியைப் பின்பற்றும் என்றும் அவர் கூறினார். உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போன்ற முக்கிய போட்டிகள் அடுத்தடுத்து இருக்கும்போது, வீரர்களின் காயங்கள், உடற்தகுதியை பேணுவது குறித்தும் யோசிக்கக் வேண்டும் எனக்கூறிய ராகுல் டிராவிட், இதுபோன்ற சமயங்களில் ஒவ்வொரு தனிப்பட்ட தொடர் மற்றும் ஆட்டங்களை பற்றி கவலைப்பட முடியாது எனக் கூறியுள்ளார். எனினும், ஆகஸ்ட் 1ல் நடக்க உள்ள மூன்றாவது போட்டியில் இருவரும் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.