NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஒருநாள் உலகக்கோப்பையில் பரிசீலிக்கப்படாதது குறித்து மனம் திறந்த அஸ்வின் ரவிச்சந்திரன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒருநாள் உலகக்கோப்பையில் பரிசீலிக்கப்படாதது குறித்து மனம் திறந்த அஸ்வின் ரவிச்சந்திரன்
    ஒருநாள் உலகக்கோப்பையில் பரிசீலிக்கப்படாதது குறித்து மனம் திறந்த அஸ்வின் ரவிச்சந்திரன்

    ஒருநாள் உலகக்கோப்பையில் பரிசீலிக்கப்படாதது குறித்து மனம் திறந்த அஸ்வின் ரவிச்சந்திரன்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 17, 2023
    04:59 pm

    செய்தி முன்னோட்டம்

    2022 டி20 உலகக் கோப்பை தொடரின் மூலம் ஒயிட் பால் கிரிக்கெட்டில் மீண்டும் இந்திய அணிக்கு அஸ்வின் ரவிச்சந்திரன் கம்பேக் கொடுத்தாலும், 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கான அணியில் அவர் பரிசீலிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

    டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த நேர்காணலில் ஒருநாள் உலகக்கோப்பையில் பரிசீலிக்கப்படாதது குறித்து கேட்கப்பட்டதற்கு, இதுபோன்ற எண்ணங்களுக்கு மனதளவில் இடம் கொடுக்க வேண்டாம் என்று நீண்ட காலத்திற்கு முன்பே முடிவு செய்ததாகக் கூறினார்.

    மேலும், அணியை தேர்ந்தெடுப்பது தனது வேலை அல்ல என்பதால் அதில் கவனம் செலுத்துவதில்லை என்றார்.

    பொதுவாக எந்த ஒரு வேலையையும் முடிக்காமல் வைத்திருப்பதில் நம்பிக்கை இல்லை என்றும், தான் அணியில் இல்லாவிட்டாலும், இந்தியா மீண்டும் ஒருநாள் உலகக்கோப்பையை வெல்வதைப் பார்க்க மிகுந்த ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    ashwin prepares for south africa series

    தென்னாப்பிரிக்க தொடரில் கவனம் செலுத்தும் அஸ்வின்

    கடந்த காலத்தில் ஓய்வு பெற நினைத்தது குறித்த அஸ்வினின் பழைய கருத்து குறித்தும் இந்த நேர்காணலில் கேட்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்து தற்போதைய மனநிலை குறித்து பேசிய அஸ்வின், "நீங்கள் இரண்டு விஷயங்களை இணைக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். காயம் காரணமாக நான் ஓய்வு பெறுவதைக் கருத்தில் கொள்ளவில்லை. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    மேலும் என் கிரிக்கெட் வாழ்க்கையை சுற்றி சில நிச்சயமற்ற தன்மை இருந்தது. அதனால் நான் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

    ஆனால் இப்போது, நான் நன்றாக பந்துவீசுவதாகவும், பேட்டிங் செய்வதாகவும் உணர்கிறேன். இன்னும் கொஞ்சம் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். அடுத்து தென்னாப்பிரிக்க தொடரில் எனது கவனம் உள்ளது." என்றார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அஸ்வின் ரவிச்சந்திரன்
    ஒருநாள் உலகக்கோப்பை
    இந்திய கிரிக்கெட் அணி
    கிரிக்கெட்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    அஸ்வின் ரவிச்சந்திரன்

    யார் இந்த அபிமன்யு ஈஸ்வரன்? இந்தியா
    பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் : அஸ்வினை கண்டு மரண பீதியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள்! டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    வாய்ப்பே இல்லை! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மிரட்டல் குறித்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கருத்து! கிரிக்கெட்
    டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியர்! அஸ்வின் சாதனை! கிரிக்கெட்

    ஒருநாள் உலகக்கோப்பை

    இந்தியாவுக்கு கிரிக்கெட் அணியை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவிப்பு கிரிக்கெட்
    இதே நாளில் அன்று : 1983இல் ஒருநாள் உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்த இந்தியா கிரிக்கெட்
    ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் பாகிஸ்தானின் சாதனையை முறியடித்த ஜிம்பாப்வே ஒருநாள் கிரிக்கெட்
    ஒருநாள் உலகக்கோப்பையில் பங்கேற்பது குறித்து புதிய அப்டேட்டை வெளியிட்ட கேன் வில்லியம்சன் ஒருநாள் கிரிக்கெட்

    இந்திய கிரிக்கெட் அணி

    வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர் : 17 ஆண்டுகால சாதனையை தக்கவைக்குமா இந்தியா? ஒருநாள் கிரிக்கெட்
    தொடர்ந்து 13 வது முறையாக, WI க்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா  ஒருநாள் கிரிக்கெட்
    மேற்கிந்தியத் தீவுகளின் ஏற்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்திருக்கும் ஹர்திக் பாண்டியா வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி
    ODI உலகக்கோப்பை : இந்தியா-பாகிஸ்தான் போட்டி தேதி மாற்றம் உறுதி; பாக். கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் ஒருநாள் உலகக்கோப்பை

    கிரிக்கெட்

    3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்தியா வெற்றி இந்திய அணி
    2021-22 நிதியாண்டில் ரூ.1,159 கோடி வருமான வரி செலுத்திய BCCI பிசிசிஐ
    50 ஓவர் உலகக்கோப்பைத் தொடரின் அட்டவணையில புதிய மாற்றங்களைச் செய்திருக்கும் பிசிசிஐ உலக கோப்பை
    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தீ விபத்து; உலகக்கோப்பை போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா? ஒருநாள் உலகக்கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025