Page Loader
SA vs BAN ஒருநாள் உலகக்கோப்பை: வங்கதேச அணிக்கு 382 ரன்கள் இலக்கு
தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 368 ரன்களை எடுத்தது

SA vs BAN ஒருநாள் உலகக்கோப்பை: வங்கதேச அணிக்கு 382 ரன்கள் இலக்கு

எழுதியவர் Sindhuja SM
Oct 24, 2023
06:20 pm

செய்தி முன்னோட்டம்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் இன்று(அக் 24) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வங்கதேச கிரிக்கெட் அணிக்கு தென்னாபிரிக்கா 382 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்து களமிறங்கியது. முதல் 8 ஓவர்களில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் ராஸ்ஸி வான் டெர் டஸ்சன் ஆகியோரின் தோல்வியால் தென்னாப்பிரிக்கா அணி ஆரம்பத்திலேயே ஆட்டத்தை கண்டது. எனினும், அதன் பிறகு பேட்டிங் செய்த குயின்டன் டி காக் மற்றும் எய்டன் மார்கம் இருவரும் ஒன்றிணைந்து தங்கள் அணிக்கு உறுதியான அடித்தளத்தை அமைத்தனர். மார்க்ரம் ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதற்கு மாறாக, தொடக்கத்தில் இருந்தே, டி காக் ரன்களை எடுத்து குவித்தார்.

சஞ்சய்

ரன்களை குவித்து அரங்கத்தை அலறவிட்ட தென்னாபிரிக்கா 

அதன்பின், 60 ரன்களில் மார்க்ரம் அவுட் ஆன நிலையில், டி காக் தொடர்ந்து சிறப்பாக விளையாடி, நடப்பு உலகக்கோப்பை தொடரில் 3வது சதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார். சதம் எடுத்தது போதாதென்று 174 ரன்கள் வரை நின்று விளையாடிய டி காக், ஹென்ரிச் கிளாசனுடன் சேர்ந்து அரங்கத்தையே அலற வைத்தார். 6வது வீரராக பேட்டிங் செய்ய களமிறங்கிய டேவிட் மில்லர் தன்னால் முடிந்த ரன்களை எடுத்தார். இதற்கிடையில், 90 ரன்களில் அவுட் ஆகிய ஹென்ரிச் கிளாசன், தனது சதத்தை 'ஜஸ்ட் மிஸ்ஸில்' தவறவிட்டார் இந்நிலையில், தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 382 ரன்களை எடுத்தது