SA vs BAN: நடப்பு உலகக்கோப்பை தொடரில் 3வது சதத்தை பதிவு செய்து தென்னாப்பிரிக்க வீரர் சாதனை
மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று வங்கதேசத்திற்கு எதிரான 13வது ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின், 23வது லீக் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இந்த லீக் போட்டியில் தென்னாபிரிக்காவும் வங்கதேச அணிகளும் மோதுகின்றன. இன்று மதியம் தொடங்கிய இப்போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த தென்னாபிரிக்கா, ரன்களை அடித்து விளாசி கொண்டிருக்கிறது. இந்நிலையில், தென்னாபிரிக்க வீரரான குயின்டன் டி காக், நடப்பு உலகக்கோப்பை தொடரில் 3வது சதத்தை அடித்து சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து, ஒரே உலகக்கோப்பை தொடரில் 3 சதங்களை அடித்த முதல் தென்னாபிரிக்க வீரர் என்ற பெயர் அவருக்கு கிடைத்துள்ளது.
தென்னாபிரிக்கா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 368 ரன்கள்
மேலும், அதிரடியாக விளையாடி வந்த தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக். 174 ரன்களை எடுத்து அரங்கத்தையே அலறவைத்த பிறகு அவுட் ஆனார். தற்போது, ஹென்ரிச் கிளாசென் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் பேட்டிங் செய்து வருகின்றனர். ஹென்ரிச் கிளாசென் 90 ரன்களை எடுத்து, மேலும் ரன்களை குவித்து வருகிறார். டேவிட் மில்லர் 28 ரன்களை எடுத்துள்ளார். இந்நிலையில், தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 382 ரன்களை எடுத்துள்ளது. இன்று வெற்றி பெறும் பட்சத்தில், புள்ளி பட்டியலில் தென்னாபிரிக்க இரண்டாம் இடத்திற்கு முன்னேறும்.