
"இன்றும், என்றும் எப்போதும் உங்களுடன் இருப்போம்": இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி ட்வீட்
செய்தி முன்னோட்டம்
நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி போட்டியில், இந்தியாவை 6-விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆறாவது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது, ஆஸ்திரேலியா அணி.
அதுவரை விளையாடிய லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி, இந்த போட்டியிலும் வெல்லும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், இந்தியாவின் வெற்றி வாய்ப்பு கை நழுவி போனது.
எனினும், "நாங்கள் எப்போதும் உங்களுடன் நிற்போம்" என இந்திய அணிக்கு பிரபலங்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
"அன்புள்ள இந்திய அணியினரே, உலகக்கோப்பையின் மூலம் நீங்கள் வெளிப்படுத்திய திறமை மற்றும் உறுதிப்பாடு குறிப்பிடத்தக்கது. நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடி தேசத்திற்கு மகத்தான பெருமை சேர்த்திருக்கிறீர்கள். நாங்கள் இன்றும் எப்போதும் உங்களுடன் நிற்போம்" என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி ட்வீட்
Dear Team India,
— Narendra Modi (@narendramodi) November 19, 2023
Your talent and determination through the World Cup was noteworthy. You've played with great spirit and brought immense pride to the nation.
We stand with you today and always.
card 2
ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்
அதேபோல, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், தனது மாறுதல்களையும், வெற்றி வாகை சூடிய ஆஸ்திரேலியா அணிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
"டீம் இந்தியா, நீங்கள் போட்டியில் சிறப்பாக விளையாடினீர்கள்! வெற்றியோ தோல்வியோ - எப்படியாயினும் நாங்கள் உங்களை விரும்புகிறோம், அடுத்த கோப்பையை வெல்வோம். உலகக் கோப்பை வெற்றிக்கு தகுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலினும், "உலகக் கோப்பையில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள்! அரையிறுதி வரை தோற்கடிக்க முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தி, இறுதிப் போட்டிக்கு உற்சாகமாக ஓடிய டீம் இந்தியாக்கு பாராட்டுக்கள். உங்கள் விடாமுயற்சியும் ஆர்வமும் உண்மையிலேயே பாராட்டுக்குரியது!" எனக்கூறியுளார்.
ட்விட்டர் அஞ்சல்
ராகுல் காந்தி ஆறுதல்
Team INDIA, you played solidly well through the tournament!
— Rahul Gandhi (@RahulGandhi) November 19, 2023
Win or lose - we love you either way and we will win the next one.
Congratulations to Australia for a well deserved World Cup victory.
ட்விட்டர் அஞ்சல்
முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்
Congratulations to Australia on a magnificent #WorldCup victory! 🏆
— M.K.Stalin (@mkstalin) November 19, 2023
Kudos to #TeamIndia for a spirited run to the finals, showcasing unbeatable form till the semis. Your resilience and passion were truly commendable! 🏏👏 #WorldCupFinal2023 #INDvAUS