NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2023 : ஆர்சிபி அணிக்காக 800 ரன்களை எடுத்த எட்டாவது வீரர் என்ற சாதனை படைத்த டு பிளெஸ்ஸிஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் 2023 : ஆர்சிபி அணிக்காக 800 ரன்களை எடுத்த எட்டாவது வீரர் என்ற சாதனை படைத்த டு பிளெஸ்ஸிஸ்
    ஆர்சிபி அணிக்காக 800 ரன்களை எடுத்த எட்டாவது வீரர் என்ற சாதனை படைத்த டு பிளெஸ்ஸிஸ்

    ஐபிஎல் 2023 : ஆர்சிபி அணிக்காக 800 ரன்களை எடுத்த எட்டாவது வீரர் என்ற சாதனை படைத்த டு பிளெஸ்ஸிஸ்

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 20, 2023
    08:01 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2023 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார்.

    வியாழக்கிழமை பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இம்பாக்ட் வீரராக பேட்டிங்கில் களமிறங்கிய டு பிளெஸ்ஸிஸ், 56 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார்.

    இந்த சீசனில் ஆறு ஆட்டங்களில், டு பிளெஸ்ஸிஸ் 68.60 சராசரியில் 166.50 ஸ்ட்ரைக் ரேட்டில் 343 ரன்கள் குவித்துள்ளார்.

    இதில் நான்கு முறை அரைசதங்களை எட்டியுள்ளார்.

    தற்போது வரை 300 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே வீரர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் நடப்பு ஐபிஎல் சீசனில் ஃபாஃப் 25 பவுண்டரிகள் மற்றும் 23 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

    faf du plessis record in ipl

    ஐபிஎல்லில் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸின் சாதனைகள்

    டு பிளெஸ்ஸிஸ் ஐபிஎல்லில் இதுவரை 122 போட்டிகளில், 36.36 சராசரியில் 3,746 ரன்கள் எடுத்துள்ளார்.

    பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான அரைசதம் மூலம் ஐபிஎல்லில் தனது 29வது அரைசதத்தை பதிவு செய்தார்.

    மேலும் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக, 61.23 சராசரியில் 796 ரன்கள் எடுத்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 9 அரைசதங்களை விளாசியுள்ளார்.

    இதன் மூலம் ராபின் உத்தப்பாவின் 772 ரன்களை முறியடித்து, பஞ்சாப் அணிக்கு எதிராக ஆறாவது அதிக ஸ்கோர் அடித்தவர் எனும் பெருமையை பெற்றுள்ளார்.

    ஆர்சிபிக்காக 800 ரன்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

    அவர் 40.55 சராசரியில் 811 ரன்கள் எடுத்துள்ளார். ஆர்சிபிக்காக 800க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்த எட்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    கிரிக்கெட்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஐபிஎல்

    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது குஜராத் டைட்டன்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல் 2023
    சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் விதிமீறல் : அஸ்வினுக்கு 25 சதவீதம் அபராதம் விதித்தது பிசிசிஐ ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : கேகேஆர் vs சன்ரைசர்ஸ்! கடந்த கால புள்ளி விபரங்கள்! ஐபிஎல் 2023
    ஐபிஎல்லில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் : லசித் மலிங்காவின் சாதனையை முறியடித்த ககிசோ ரபாடா ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023

    காலில் காயமடைந்த தோனி : முக்கிய அப்டேட் கொடுத்த சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் ஐபிஎல்
    மெதுவாக பந்துவீசியதால் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் ராஜஸ்தான் ராயல்ஸ்
    சிஎஸ்கேவின் அடுத்த போட்டியில் தோனி விளையாடுவாரா? சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல் 2023 : புள்ளிப்பட்டியல், ஆரஞ்சு மற்றும் பர்ப்பிள் கேப் வைத்துள்ளவர்கள் தற்போதைய நிலவரம் ஐபிஎல்

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : யார் பெஸ்ட்? ஐபிஎல்
    ஐபிஎல்லுக்கு அடுத்து என்ன? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தினேஷ் கார்த்திக் ஐபிஎல் 2023
    காயத்திலிருந்து குணமடையாத ஜோஷ் ஹேசில்வுட் : பின்னடைவை சந்திக்கும் ஆர்சிபி ஐபிஎல் 2023
    ஐபிஎல்லில் 50 முறை 50+ ஸ்கோர்கள் எடுத்த முதல் இந்தியர்: விராட் கோலி சாதனை ஐபிஎல் 2023

    கிரிக்கெட்

    ஐபிஎல் 2023 : மெதுவாக பந்துவீசியதற்காக ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் ஐபிஎல்
    "எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும்" : வேட்டி சட்டையுடன் சிஎஸ்கே கேப்டன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து சென்னை சூப்பர் கிங்ஸ்
    குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் போட்டியில் நிகழ்த்தப்பட்ட 6 பெரிய சாதனைகள் குஜராத் டைட்டன்ஸ்
    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025