பாரிஸ் பாராலிம்பிக்ஸ்: பாக்யஸ்ரீ ஜாதவ், சுமித் ஆன்டில் தேசியக் கொடி ஏந்திச் செல்வார்கள் என அறிவிப்பு
குண்டு எறிதல் சாம்பியனான பாக்யஸ்ரீ ஜாதவ் மற்றும் ஈட்டி எறிதல் வீரர் சுமித் ஆன்டில் ஆகியோர் வரவிருக்கும் 2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸ்பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய கொடியை ஏந்திச் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளதுகொடி ஏந்தியவர்களாக இந்தியா தேர்வு செய்துள்ளது. முன்னதாக, டோக்கியோ பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் அதிகபட்சமாக 54 பேர் இந்தியா சார்பில் பங்கேற்ற நிலையில், தற்போது அந்த சாதனையை முறியடித்து, முன்னோடியில்லாத வகையில் 84 தடகள வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாக்யஸ்ரீ ஜாதவ், 2017இல் விளையாட்டைத் தொடங்கிய நிலையில், குண்டு எறிதலில் ஃபெஜா உலகக் கோப்பை மற்றும் உலக பாரா தடகள விளையாட்டுகள் உட்பட சர்வதேச நிகழ்வுகளில் பதக்கங்களைப் பெற்றதன் மூலம் விரைவாக கவனம் ஈர்த்தார்.
சுமித் ஆன்டிலின் சாதனைகள்
ஈட்டி எறிதல் நட்சத்திர பாரா தடகள வீரரான சுமித் அன்டில் எப்64 பிரிவில் தற்போதைய உலக சாதனையை படைத்துள்ளார். அவர் 2020 டோக்கியோ பாராலிம்பிக்ஸில் 68.55 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றார். 2023 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்தை உறுதி செய்வதன் மூலம் ஆன்டில் தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தார். 2022 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆன்டில் 73.29 மீ தூரம் புதிய உலக சாதனை படைத்தார். இதற்கிடையே, இந்தியா இந்த முறை மொத்தம் 12 விளையாட்டுக்களில் பங்கேற்க உள்ளது. பெண் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை டோக்கியோவில் 14 ஆக இருந்த நிலையில், பாரிஸில் 32 ஆக அதிகரித்துள்ளது.