சூப்பர் கோப்பை கால்பந்து தொடர் 2023 : முதல் முறையாக பட்டம் வென்ற ஒடிஷா எப்சி
செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 25) கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள ஈஎம்எஸ் கார்ப்பரேஷன் ஸ்டேடியத்தில் நடந்த சூப்பர் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பெங்களூர் எப்சி அணியை வீழ்த்தி ஒடிஷா எப்சி முதல் முறையாக பட்டத்தை கைப்பற்றியுள்ளது. போட்டியின் முதல் பாதியில் ஒடிஷா அணிக்காக பிரேசிலின் டியாகோ மொரிசியோ இரண்டு கோல்களை அடித்தார். இடையில் மழை பெய்து ஆட்டத்தை சிறிது நேரம் பாதித்தது. பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கிய நிலையில், போட்டியின் 84வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் சுனில் சேத்ரி கோல் அடித்து பெங்களூரு அணிக்கு முதல் கோலை பெற்றுக் கொடுத்தார். எனினும் பெங்களூர் அணியால் அதன் பிறகு கோல் எதுவும் அடிக்க முடியாததால், ஒடிஷா 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.