NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / பும்ரா-சஞ்சனா தம்பதிக்கு ஆண் குழந்தை!
    பும்ரா-சஞ்சனா தம்பதிக்கு ஆண் குழந்தை!
    விளையாட்டு

    பும்ரா-சஞ்சனா தம்பதிக்கு ஆண் குழந்தை!

    எழுதியவர் Prasanna Venkatesh
    September 04, 2023 | 12:40 pm 1 நிமிட வாசிப்பு
    பும்ரா-சஞ்சனா தம்பதிக்கு ஆண் குழந்தை!
    பும்ரா-சஞ்சனா தம்பதிக்கு ஆண் குழந்தை

    காயத்தின் காரணமாக ஒரு வருடமாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்து பும்ரா, மீண்டும் முக்கியமான தொடரான ஆசிய கோப்பைத் தொடரில் இந்திய அணியுடன் இணைந்திருக்கிறார். மேலும், உலக கோப்பைத் தொடரிலும் பும்ரா தேர்வு செய்யப்படவிருப்பதாகவே தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆசிய கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்தியாவின் முதல் போட்டியில், இந்தியா பேட்டிங் செய்த பிறகு மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது. மேலும், முக்கியமான இந்தத் தொடரில் இன்னும் ஒரு போட்டியில் கூட அவர் பந்து வீசவில்லை. ஆனால், இதற்கிடையில் தனிப்பட்ட காரணங்களுக்காக மும்பை சென்றிருப்பதால், இன்று நேபாளுக்கு எதிராக நடைபெறவிருக்கும் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியானது.

    பும்ராவிற்கு ஆண் குழந்தை: 

    இந்நிலையில், தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக இஸ்டாகிராம் தளத்தில் புகைப்படத்துடன் பகிர்வொன்றைப் பகிர்ந்திருக்கிறார் பும்ரா. ஆம், ஜஸ்பிரித் பும்ரா - சஞ்சனா கணேசன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. 'எங்கள் சிறிய குடும்பம் வளர்ந்திருக்கிறது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறோம்' என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் அவர், இன்று காலை குழந்தை பிறந்திருப்பதாகவும் அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். ஆசிய கோப்பைத் தொடரில், இந்தியாவின் குழுச் சுற்றுப் போட்டிகள் இன்றுடன் நிறைவடையும் நிலையில், சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியுடன் பும்ரா இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பும்ராவின் இன்ஸ்டாகிராம் பதிவு:

    Instagram post

    A post shared by jaspritb1 on September 4, 2023 at 12:05 pm IST

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கிரிக்கெட்
    ஆசிய கோப்பை

    கிரிக்கெட்

    BANvsAFG: 335 இலக்கை எளிதாக டிஃபெண்டு செய்து முதல் வெற்றியைக் கைப்பற்றியது வங்கதேசம் ஆசிய கோப்பை
    கிரிக்கெட் உலகக் கோப்பை: எந்தெந்த வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு? உலக கோப்பை
    ஆசிய கோப்பை 2023 : விடாது பெய்த மழை; முடிவில்லாமல் முடிந்த இந்தியா vs பாகிஸ்தான் போட்டி ஆசிய கோப்பை
    ஆசிய கோப்பை 2023 : பாகிஸ்தானுக்கு 267 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா ஆசிய கோப்பை

    ஆசிய கோப்பை

    BANvsAFG: ஆஃப்கான் பவுலர்களைப் பந்தாடிய வங்கதேசத்தின் மெஹிடி ஹாசன் மற்றும் ஷான்டோ வங்கதேச கிரிக்கெட் அணி
    ஆசிய கோப்பை BANvsAFG : டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு வங்கதேச கிரிக்கெட் அணி
    ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா இந்திய ஹாக்கி அணி
    ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டாவது அரைசதம் அடித்த ஹர்திக் பாண்டியா ஒருநாள் கிரிக்கெட்
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023