
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை எட்டி ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் சாதனை
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை கடந்து புதிய மைல்கல் சாதனையை எட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 4வது நாளில் லயன் இந்த சாதனையை எட்டினார்.
இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை கடந்த இரண்டாவது ஆஃப் ஸ்பின்னர் என்ற பெருமையை லயன் பெற்றுள்ளார்.
முன்னதாக, அவர் இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் முன் இந்த மைல்கல்லை எட்டுவதற்கு அவருக்கு நான்கு விக்கெட்டுகள் தேவைப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Nathan Lyon reaches 500 wickets milestone in test cricket
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள்
மேலே குறிப்பிட்டுள்ளபடி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை பூர்த்தி செய்த இரண்டாவது ஆஃப் ஸ்பின்னர் நாதன் லயன் ஆவார்.
மேலும், ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த சாதனையை எட்டிய எட்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இலங்கையின் முத்தையா முரளிதரன் (800), ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் (708), இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் (690), இந்தியாவின் அனில் கும்ப்ளே (619), இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் (604), ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத் (563), வெஸ்ட் இண்டீசின் கோர்ட்னி வால்ஷ் (519) ஆகியோர் மட்டுமே இதற்கு முன்னர் 500 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை எட்டி லயனை விட முன்னிலையில் உள்ளனர்.