Page Loader
உலகக்கோப்பையில் ஜாம்பவான் ஆலன் டொனல்டின் சாதனையை முறியடித்த முகமது ஷமி
உலகக்கோப்பையில் ஜாம்பவான் ஆலன் டொனல்டின் சாதனையை முறியடித்த முகமது ஷமி

உலகக்கோப்பையில் ஜாம்பவான் ஆலன் டொனல்டின் சாதனையை முறியடித்த முகமது ஷமி

எழுதியவர் Sekar Chinnappan
Oct 30, 2023
12:02 pm

செய்தி முன்னோட்டம்

லக்னோவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி புதிய சாதனையை எட்டியுள்ளார். இந்த போட்டியில், ஜானி பேர்ஸ்டோவ் (14), பென் ஸ்டோக்ஸ் (0), மொயீன் அலி (15) மற்றும் அடில் ரஷீத் (13) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், முகமது ஷமி உலகக் கோப்பை போட்டிகளில் மொத்தமாக 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் ஜாம்பவானான ஆலன் டொனால்ட் மற்றும் இம்ரான் தாஹிரை போன்றோரை பின்னுக்குத் தள்ளி 11வது இடத்திற்கு முன்னேறினார்.

Mohammad Shami surpasses allan donald in world cup

இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் முகமது ஷமி

உலகக்கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய கிரிக்கெட் அணி வீரர்களில் ஜாகீர் கான் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் முகமது ஷமி உள்ளார். ஜாகீர் கான் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் தலா 44 விக்கெட்டுகளுடன் இந்திய அளவில் முதலிடத்திலும், சர்வதேச அளவில் எட்டாவது இடத்தில் உள்ளனர். இதற்கிடையே, ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத் இந்த பட்டியலில் 71 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், முத்தையா முரளிதரன் 68 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். நடப்பு உலகக்கோப்பை போட்டியைப் பொறுத்தவரை, இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள முகமது ஷமி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளும், மற்றொரு போட்டியில் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.