MI vs CSK: விளாசி தள்ளிய தல; விக்கெட்டுகளை அள்ளிய பத்திரனா
நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 29-வது லீக் போட்டி நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில், சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு சீசன் வெளியூர் மைதானத்தில் (away) CSK அணி பதிவு செய்துள்ள முதல் வெற்றி இதுவாகும். முதல் இன்னிங்சில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா மற்றும் ரஹானே இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். சிஎஸ்கே அணியின் துபே சிக்ஸர்களை விளாச, 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்திருந்தது சிஎஸ்கே.
சுழன்று அடித்த சிஎஸ்கே அணி
நேற்றைய போட்டியில் அணியின் கேப்டன் ருதுராஜ் மற்றும் துபே அரைசதங்களை கடந்தனர். இறுதியில் தோனி களமிறங்கினார். அவர் எதிர்கொண்ட முதல் மூன்று பந்துகளும் சிக்ஸர். இன்னிங்சின் முடிவில், 4 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார் தோனி. அடுத்தாததாக களமிறங்கிய MI அணிக்காக ரோஹித் ஷர்மா மற்றும் இஷான் கிஷான் இணைந்து 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால், MI அணியின் முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார், பத்திரனா. இஷான் கிஷனை 8-வது ஓவரில் 23 ரன்களில் வெளியேற்றினார். அதே ஓவரில் சூர்யகுமார் யாதவை டக் அவுட் செய்தார். பின்னர் வந்த ரொமாரியோ ஷெப்பர்டையும் போல்ட் செய்தார். மறுமுனையில் நின்று ஆடிய ரோஹித் ஷர்மா, கடைசி ஓவரில் சதம் விளாசினார். எனினும் MI அணி, தோல்வியுற்றது.