
பிஎஸ்ஜி அணியிலிருந்து விலகுகிறார் லியோனல் மெஸ்ஸி! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
செய்தி முன்னோட்டம்
அர்ஜென்டினா முன்கள வீரர் லியோனல் மெஸ்ஸி பிஎஸ்ஜி கால்பந்து கிளப்பில் இருந்து வெளியேற உள்ளதாக அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டோஃப் கால்டியர் அதிகாரப்பூர்வமாக வியாழக்கிழமை (ஜூன் 1) தெரிவித்துள்ளார்.
மெஸ்ஸி பிஎஸ்ஜி அணிக்காக தனது கடைசி ஆட்டத்தை சனிக்கிழமை (ஜூன் 3) கிளர்மாண்டிற்கு எதிராக விளையாட உள்ளார்.
கிறிஸ்டோஃப் கால்டியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கால்பந்து வரலாற்றில் சிறந்த வீரருக்கு பயிற்சி அளிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.
இது பார்க் டெஸ் பிரின்சஸில் அவரது கடைசி போட்டியாக இருக்கும். மேலும் அவர் அன்பான வரவேற்பைப் பெறுவார் என்று நம்புகிறேன்." என்று கூறினார்.
மெஸ்ஸி அடுத்ததாக சவூதி அரேபிய கிளப்பான அல்-ஹிலால் அல்லது பார்சிலோனாவில் இணைவார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Lionel Messi will leave PSG after two years at the club, head coach Christophe Galtier has confirmed. pic.twitter.com/TK2Nvnp4CL
— ESPN FC (@ESPNFC) June 1, 2023