ஓய்வு பெறுவதாக கூறப்பட்ட தகவல் பொய்: ரிடைர்மென்ட் குறித்த தகவலை மறுத்த மேரி கோம்
குத்துச்சண்டை போட்டியிலிருந்து மேரி கோம், ஓய்வு பெறுவதாக அறிவித்ததாக நேற்று இரவு செய்தி வெளியானது. தனக்கு விளையாடும் ஆர்வம் இருந்தாலும், குத்துச்சண்டை சங்கத்தின் விதி காரணமாக ஓய்வு பெறுவதாக அவர் தெரிவித்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், அந்த செய்தி பொய் என அவர் மறுத்துள்ளார். "திப்ருகாரில் நடந்த ஒரு பள்ளி நிகழ்வில் நான் கலந்துகொண்டேன். அங்கு நான் குழந்தைகளை ஊக்கப்படுத்தினேன். 'எனக்கு இன்னும் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற பசி இருக்கிறது, ஆனால் ஒலிம்பிக்கில் வயது வரம்பு இருப்பதால் என்னை பங்கேற்க அனுமதிக்கவில்லை. ஆனால் என்னால் விளையாட்டை தொடரமுடியும்". "நான் இன்னும் எனது உடற்தகுதியில் கவனம் செலுத்துகிறேன். எப்போது ஓய்வு பெறுவேன் என்பதை நானே அனைவருக்கும் தெரிவிப்பேன்." என அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.