
கால்பந்தின் உயரிய விருதான பலோன் டி'ஓர் விருதை 8வது முறையாக வென்றார் மெஸ்ஸி
செய்தி முன்னோட்டம்
கால்பந்தாட்டத்தின் சிறந்த வீரராக கருதப்படுபவர், லியோனல் மெஸ்ஸி.
இவர் இந்தாண்டிற்கான, பலோன் டி 'ஓர் விருதை 8வது முறையாக வென்றுள்ளார்.
கால்பந்து விளையாட்டில், 1956ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு, பலோன் டி 'ஓர் விருது வழங்கப்படும். அது, இந்த விளையாட்டின் உயர்ந்த விருதாகவும் கருதப்படுகிறது.
இந்த நிலையில், இந்த ஆண்டு இந்த விருதிற்காக 30 வீரர்கள் மற்றும் 30 வீராங்கனைகள் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது.
இவர்களுள், கடந்த ஆண்டு அர்ஜென்டினா அணி உலக கோப்பை வெல்வதற்கு முக்கியபங்கு வகித்த, லியோனல் மெஸ்ஸி விருதை வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இவர் 8-வது முறையாக இந்த விருதை வெல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் எம்பாப்பே மற்றும் எர்லிங் ஹாலண்ட் ஆகியோரும் இந்த விருதிற்கு போட்டியிட்டனர்.
ட்விட்டர் அஞ்சல்
பலோன் டி'ஓர் விருதை 8வது முறையாக வென்ற மெஸ்சி
Aitana Bonmati & Lionel Messi! Our 2023 Ballon d'Or!#ballondor pic.twitter.com/5vReANytDC
— Ballon d'Or #ballondor (@ballondor) October 30, 2023