Page Loader
மரடோனோ, பீலே வரிசையில் இணைந்த லியோனல் மெஸ்ஸி
மரடோனோ, பீலே வரிசையில் இணைந்த லியோனல் மெஸ்ஸி

மரடோனோ, பீலே வரிசையில் இணைந்த லியோனல் மெஸ்ஸி

எழுதியவர் Sekar Chinnappan
Mar 28, 2023
09:27 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த ஆண்டு அர்ஜென்டினா அணிக்கு கால்பந்து உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்ததன் மூலம் லியோனல் மெஸ்ஸிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதையடுத்து தென் அமெரிக்க கூட்டமைப்பின் அருங்காட்சியகத்தில் டியாகோ மரடோனா பீலேவின் சிலைகளுடன் தற்போது மெஸ்ஸியின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. திங்களன்று (மார்ச் 27) கோபா லிபர்டடோர்ஸ் டிராவிற்கு முன் பராகுவேயில் உள்ள தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பின் தலைமையகத்தில் நடந்த திறப்பு விழாவில் சிலை திறப்பு விழா நடைபெற்றது. தனது சிலைக்கு அருகில் லியோனல் மெஸ்ஸி நிற்பது போல் கொடுத்துள்ள பாஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்பு மெஸ்ஸியின் பெயரை தேசிய அணியின் பயிற்சி நிலையத்திற்கு வைத்து பெருமை சேர்த்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

மெஸ்ஸியின் முழு உருவ சிலை