Page Loader
1000 ரன்களைக் கடந்த நேபாள வீரர்கள் பட்டியலில் மூன்றாவதாக இணைந்தார் குஷால் புர்டெல்
1000 ரன்களைக் கடந்த நேபாள வீரர்கள் பட்டியலில் மூன்றாவதாக இணைந்தார் குஷால் புர்டெல்

1000 ரன்களைக் கடந்த நேபாள வீரர்கள் பட்டியலில் மூன்றாவதாக இணைந்தார் குஷால் புர்டெல்

எழுதியவர் Prasanna Venkatesh
Sep 04, 2023
04:35 pm

செய்தி முன்னோட்டம்

ஆசிய கோப்பைத் தொடரில் இந்து இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டாஸை வென்று முதலில் பந்து வீசி வருகிறது இந்திய அணி. தற்போது முதலில் பேட் செய்து வரும் நேபாள அணியின் சார்பாக குஷால் புர்டெல் மற்றும் ஆசிக் ஷேக் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். இந்தப் போட்டியில் 38 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்த குஷால் புர்டெல், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்த நேபாள வீரர்கள் பட்டியலில் மூன்றாவது வீரராக இணைந்திருக்கிறார். 2021ம் ஆண்டு நேபாள அணிக்காக சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அறிமுகமானார் குஷால் புர்டெல்.

கிரிக்கெட்

அதிக ரன்களைக் குவித்த வீரர்: 

இன்று தன்னுடை 39வது போட்டியில் களமிறங்கி 1000 ரன்களை நிறைவு செய்திருக்கிறார் அவர். இதற்கு முன்னதாக, ரோகித் பவுடெல் மற்றும் ஆசிப் ஷேக் ஆகிய நேபாளத்தைச் சேர்ந்த வீரர்கள் மட்டுமே 1000 ரன்களைக் கடந்திருக்கின்றனர். சர்வதசே ஒருநாள் போட்டிகளில் இது வரை நேபாள அணிக்காக 6 அரைசதங்கள் மற்றும் ஒரு சதத்தை அடித்திருக்கிறார் புர்டெல். இந்த 2023ம் ஆண்டு மட்டும் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில், ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதங்களுடன் 550 ரன்களைக் கடந்திருக்கிறார் குஷால் புர்டெல். இந்தாண்டு நேபாளத்திற்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் குஷால்.