Page Loader
ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 200 சிக்சர்கள்; சஞ்சு சாம்சன் சாதனையை முறியடித்தார் கே.எல்.ராகுல்
ஐபிஎல் வரலாற்றில் 200 சிக்ஸர்களை அடித்த வேகமான இந்திய வீரர் ஆனார் கே.எல்.ராகுல்

ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 200 சிக்சர்கள்; சஞ்சு சாம்சன் சாதனையை முறியடித்தார் கே.எல்.ராகுல்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 19, 2025
05:52 pm

செய்தி முன்னோட்டம்

கே.எல்.ராகுல் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) வேகமாக 200 சிக்சர்களை அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். சனிக்கிழமை (ஏப்ரல் 19) குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார். கே.எல்.ராகுல் இந்த போட்டியில் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்து 14 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகளை விளாசினார். தனது நேரக் கட்டுப்பாடு மற்றும் நேர்த்திக்கு பெயர் பெற்ற ஸ்டைலிஷ் வலது கை பேட்டரான கே.எல்.ராகுல், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் ஓவரில் பவர்ஃபுல் ஷாட் மூலம் 200 சிக்ஸர்களை எட்டினார்.

சிக்சர்கள்

200 சிக்சர்களை அதிவேகமாக எட்டிய டாப் வீரர்கள்

ராகுல் இந்த மைல்கல்லை வெறும் 129 இன்னிங்ஸ்களில் எட்டினார். முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் 159 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல் சாதனையை வைத்திருந்த நிலையில், அதை தற்போது கே.எல்.ராகுல் முறியடித்தார். இந்த பட்டியலில் எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் முறையே 165 மற்றும் 180 இன்னிங்ஸ்களில் இதே மைல்கல்லை எட்டி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். முந்தைய சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல், இந்த முறை டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் வெறும் வீரராக மட்டுமே விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.