LOADING...
துப்பாக்கிச் சுடுதலில் சர்வதேச வீராங்கனைகளை வீழ்த்தி தங்கம் வென்ற சென்னை மாணவி!
துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற சென்னை மாணவி எழிலரசி

துப்பாக்கிச் சுடுதலில் சர்வதேச வீராங்கனைகளை வீழ்த்தி தங்கம் வென்ற சென்னை மாணவி!

எழுதியவர் Sekar Chinnappan
May 31, 2023
02:10 pm

செய்தி முன்னோட்டம்

கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை எஸ் எழிலரசி தங்கம் வென்றார். சென்னை கிறிஸ்டியன் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு விஷுவல் கம்யூனிகேஷன் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி எஸ் எழிலரசி செவ்வாயன்று (மே 31) கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் ஏர்பிஸ்டல் 10 மீட்டர் மகளிர் பிரிவில் யுவிகா தோமரை 1.9 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தங்கம் வென்றார். யுவிகா தோமர் வெள்ளி வென்ற நிலையில், மனு பாக்கர் வெண்கலம் வென்றார். யுவிகா தோமர் மற்றும் மனு பாக்கர் ஆகிய இருவரும் இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் நிலையில், அவர்களை தோற்கடித்து எழிலரசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement