Page Loader
ஒருநாள் உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக சாதனை படைத்த கேசவ் மகாராஜ்
ஒருநாள் உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக சாதனை படைத்த கேசவ் மகாராஜ்

ஒருநாள் உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக சாதனை படைத்த கேசவ் மகாராஜ்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 02, 2023
10:56 am

செய்தி முன்னோட்டம்

புனேயில் புதன்கிழமை (நவம்பர் 1) நடைபெற்ற 2023 ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 190 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 357 ரன்களை குவித்த நிலையில், நியூசிலாந்து பதிலுக்கு 167 ரன்களை மட்டுமே எடுத்தது. நியூசிலாந்தை குறைந்த ரன்களில் ஆட்டமிழக்கச் செய்ததில் கேசவ் மகாராஜ் முக்கிய பங்கு வகித்தார். இந்த போட்டியில் அவர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம், ஒருநாள் உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக ஒரு இன்னிங்சில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் என்ற பெருமையை கேசவ் மகாராஜ் பெற்றுள்ளார்.

Keshav Maharaj creates record against New Zealand

கேசவ் மகாராஜின் புள்ளி விபரங்கள்

மேலே குறிப்பிட்டுள்ளபடி, உலகக் கோப்பையில் நியூசிலாந்திற்கு எதிராக ஒரு இன்னிங்சில் நான்கு விக்கெட் வீழ்த்திய ஒரே தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி வீரர் மகாராஜ் ஆவார். இதற்கு முன்னர், நியூசிலாந்துக்கு எதிராக ஆலன் டொனால்ட், மோர்னே மோர்கெல் மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகியோரும், இந்த போட்டியில் மார்கோ ஜான்சனும் மூன்று விக்கெட் வீழ்த்தி அடுத்த இடத்தில் உள்ளனர். ஒட்டுமொத்தமாக ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 38வது போட்டியில் விளையாடிய மகாராஜ் 31.25 சராசரியில் 48 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவர் எடுத்த இரண்டாவது நான்கு விக்கெட்டு இதுவாகும். இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.