
ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் அணியின் விக்கெட் கீப்பராக ஜோஸ் பட்லர் செயல்படுவார் என அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய ஜோஸ் பட்லர், ஐபிஎல் 2025 இல் மீண்டும் விக்கெட் கீப்பிங் பணிகளைத் தொடங்க உள்ளார்.
முன்பு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பிங் செய்ததால் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே அந்த அணியில் பயன்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியால் 15.75 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட பிறகு, விக்கெட் கீப்பராக அவர் திரும்புவது அணிக்கு அவசியம் என்று கேப்டன் ஷுப்மன் கில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அணியில் ஜோஸ் பட்லரின் பங்கு குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அனுஜ் ராவத் மற்றும் குமார் குஷாக்ரா இருந்தாலும், ஜோஸ் பட்லர் இப்போதைக்கு பொறுப்பேற்பார் என்று கூறினார்.
விக்கெட் கீப்பிங்
சர்வதேச கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங்
சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்ட ஜோஸ் பட்லர், பின்னர் பில் சால்ட் மற்றும் ஜேமி ஸ்மித்திடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்.
இருப்பினும், ஐபிஎல்லில் அவர் கீப்பிங்கிற்கு திரும்பியிருப்பது குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் திறனை வலுப்படுத்த உதவுகிறது.
குஜராத் டைட்டன்ஸ் அணி: ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ரஷித்கான், ஜோஸ் பட்லர், ராகுல் தீவட்டியா, ஷாருக்கான், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, நிஷாந்த் சிந்து, ககிசோ ரபாடா, கிளென் பிலிப்ஸ், மஹிபால் குராவ், மஹிபால் லோம்கிரார். கரீம் ஜனத், ஜெரால்டு கோட்ஸி, மானவ் சுதர், வாஷிங்டன் சுந்தர், அர்ஷத் கான், குர்னூர் ப்ரார், ஆர் சாய் கிஷோர், இஷாந்த் சர்மா, ஜெயந்த் யாதவ், குல்வந்த் கெஜ்ரோலியா.