Page Loader
துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம்
துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம்

துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 19, 2023
12:42 pm

செய்தி முன்னோட்டம்

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் திங்கட்கிழமை (செப்.18) நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப் ரைபிள்/பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் நிச்சால் வெள்ளி வென்றார். மகளிர் 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகளில் (3பி) போட்டியிட்ட நிச்சால், 458 புள்ளிகளுடன் முடித்து இரண்டாவது இடம் பிடித்தார். இது சீனியர் உலக போட்டிகளில் நிச்சாலுக்கு முதல் போட்டியாகும். சீனியர் பிரிவில் தனது முதல் போட்டியிலேயே பதக்கம் வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நிலையில், ரியோ டி ஜெனிரோவில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியா தலா ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளியுடன் பதக்க பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. முன்னதாக, இளவேனில் வாலறிவன் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

embed

Twitter Post

ISSF🔫 #WorldCup, Rio Update☑️ 🇮🇳 shooter and #TOPScheme Athlete Nischal cliches 🥈with a score of 458 in Women's 50m 3 Position Event! Many congratulations champ 🥳👏 pic.twitter.com/nPgD2GkfNH— SAI Media (@Media_SAI) September 19, 2023