Page Loader
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக நான்கு அரைசதங்கள் அடித்த இஷான் கிஷன்
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக நான்கு அரைசதங்கள் அடித்த இஷான் கிஷன்

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக நான்கு அரைசதங்கள் அடித்த இஷான் கிஷன்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 02, 2023
07:25 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் நட்சத்திர பேட்டர் இஷான் கிஷன் தொடர்ந்து நான்காவது ஒருநாள் அரைசதத்தை அடித்துள்ளார். 2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் தொடக்க ஆட்டத்தில் டாப் ஆர்டர் பேட்டிங் மளமளவென சரிந்த நிலையில், பாகிஸ்தானின் தாக்குதலை சமாளித்து அணியை மீட்டெடுத்தார். அவர் 81 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் மொத்தம் 82 ரன்கள் எடுத்தார். மேலும், ஐந்தாவது விக்கெட்டுக்கு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுடன் இஷான் கிஷான் ஜோடி சேர்ந்து கூட்டாக 138 ரன்கள் எடுத்தனர்.

ishan kishan odi numbers

ஒருநாள் கிரிக்கெட்டில் இஷான் கிஷன் புள்ளிவிபரம்

மேலே குறிப்பிட்டுள்ளபடி, இது ஒருநாள் கிரிக்கெட்டில் இஷான் கிஷனின் தொடர்ச்சியாக நான்கு அரைசதம் ஆகும். முன்னதாக, கடந்த ஜூலை-ஆகஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் அந்த அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் போது அவர் 77, 55 மற்றும் 52 ரன்களை பதிவு செய்தார். அந்த அரைசதங்கள் அனைத்தும் அவர் தொடக்க ஆட்டக்காரராக எடுத்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, இஷான் கிஷன் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மொத்தமாக 18 போட்டிகளில் விளையாடி 48.50 சராசரியுடன் 776 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஏழு அரைசதங்கள் மற்றும் ஒரு தனி சதம் அடங்கும். அந்த ஒரு சதம் கடந்த ஆண்டு டிசம்பரில் வங்கதேசத்துக்கு எதிராக அவர் அடித்த இரட்டை சதம் என்பது குறிப்பிடத்தக்கது.