LOADING...
ஐபிஎல்லை முந்திய 'The Hundred' மற்றும் 'SA20'! பணக்கார லீக் என்றாலும் உலக கிரிக்கெட் லீக் தரவரிசையில் சறுக்கியது ஏன்?
உலக கிரிக்கெட் லீக் தரவரிசையில் ஐபிஎல்லுக்கு மூன்றாம் இடம்

ஐபிஎல்லை முந்திய 'The Hundred' மற்றும் 'SA20'! பணக்கார லீக் என்றாலும் உலக கிரிக்கெட் லீக் தரவரிசையில் சறுக்கியது ஏன்?

எழுதியவர் Sekar Chinnappan
Mar 19, 2026
08:08 pm

செய்தி முன்னோட்டம்

உலகின் மிகப்பெரிய மற்றும் பணக்கார கிரிக்கெட் தொடரான ஐபிஎல், உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் சமீபத்திய தரவரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் ஐபிஎல் முதலிடத்தில் இருந்தாலும், நிர்வாக ரீதியான சில காரணங்களால் ஒட்டுமொத்த தரவரிசையில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-

தரவரிசை

உலக கிரிக்கெட் லீக் தரவரிசை

முதலிடம்: தி ஹன்ட்ரட் (The Hundred) - 75.2 புள்ளிகளுடன் இங்கிலாந்தின் இந்தத் தொடர் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. இரண்டாம் இடம்: எஸ்ஏ20 (SA20) - 68 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்காவின் லீக் இரண்டாம் இடத்தில் உள்ளது. மூன்றாம் இடம்: ஐபிஎல் (IPL) - 62.6 புள்ளிகளுடன் இந்தியாவின் ஐபிஎல் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. நான்காம் இடம்: பிபிஎல் (BBL) - 62.5 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக் நான்காவது இடத்தில் உள்ளது. ஐந்தாம் இடம்: பிஎஸ்எல் (PSL) - 48 புள்ளிகளுடன் பாகிஸ்தான் சூப்பர் லீக் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

ஐபிஎல்

ஐபிஎல் ஏன் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டது?

வீரர்களுக்கான சராசரி ஊதியம் மற்றும் அந்த ஊதியம் சரியான நேரத்தில் வழங்கப்படுவது போன்ற நிதி சார்ந்த விஷயங்களில் ஐபிஎல் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. இருப்பினும், பின்வரும் பகுதிகளில் நிலவும் குறைபாடுகளால் தரவரிசையில் சறுக்கியுள்ளது: வீரர்களின் உரிமைகள்: வீரர்களுக்கான சங்கம் அமைப்பது மற்றும் அவர்களுக்கான பிரதிநிதித்துவ உரிமைகள் வழங்குவதில் உள்ள சிக்கல்கள். தீர்வு காணும் முறை: வீரர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே பிரச்சனைகள் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது அதனைத் தீர்க்கும் முறைகளில் உள்ள தாமதங்கள்.

Advertisement