LOADING...
ரசிகர்கள் அதிர்ச்சி: ஐபிஎல் 2026 டிக்கெட் விலை ₹1 லட்சம் வரை உயர்வு!
MI vs RCB மோதல் டிக்கெட்டுகள் ஒரு நிமிடத்தில் விற்றுத் தீர்ந்தன

ரசிகர்கள் அதிர்ச்சி: ஐபிஎல் 2026 டிக்கெட் விலை ₹1 லட்சம் வரை உயர்வு!

எழுதியவர் Vasuki Ravichandran
Mar 25, 2026
05:21 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 19-வது சீசன் தொடங்க இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், டிக்கெட் விற்பனையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளும், விண்ணைத் தொடும் விலையும் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஐபிஎல் தொடரின் இரு பெரும் அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் ஒரு லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை 4 மணியளவில் ஆர்சிபி அணியின் உள்ளூர் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய ஒரு நிமிடத்திற்குள்ளாகவே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.

டிக்கெட் விலைப் பட்டியல்

மறுவிற்பனை இணையதளங்களில் பகல் கொள்ளை

இதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியின் டிக்கெட்டுகளும் இணையதளத்தில் வந்த வேகத்திலேயே மாயமாகின. ஆனால், அதிகாரப்பூர்வ தளங்களில் "டிக்கெட்டுகள் இல்லை" என்றும், ஆனால், மூன்றாம் தரப்பு மறுவிற்பனை இணையதளங்களில் நூற்றுக்கணக்கான டிக்கெட்டுகள் ஐந்து முதல் பத்து மடங்கு அதிகரித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள்ளது. டிக்கெட் விலைப் பட்டியல் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கான போட்டியில், ஆரம்ப விலை ₹6,500-க்கும், அதிகபட்சவிலை ₹50,000-க்கும் விற்பனையாகிறது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கான போட்டியில் ஆரம்ப விலை ₹15,000-க்கும், அதிகபட்சவிலை ₹1,00,000 வரையிலும் விற்பனையாகிறது. டிக்கெட் விற்பனையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், சாதாரண ரசிகர்கள் மணிக்கணக்கில் காத்திருந்தும் டிக்கெட் கிடைக்காத நிலையில், அதிக பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் டிக்கெட்டுகள் தடையின்றி கிடைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Advertisement