LOADING...
IPL 2026: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சாதனையை தகர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் புதிய வரலாற்று சாதனை
ஐபிஎல் வரலாற்றிலேயே மிகப்பெரிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்

IPL 2026: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சாதனையை தகர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் புதிய வரலாற்று சாதனை

எழுதியவர் Venkatalakshmi V
May 20, 2026
06:14 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல்-2026 லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான வெற்றியைப் பதிவு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பிளே-ஆஃப் சுற்றிற்கான தங்களது வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், ஐபிஎல் வரலாற்றிலேயே மிகப்பெரிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி நிர்ணயித்த 221 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ், ஆரம்பம் முதலே சிக்ஸர் மழையை பொழிந்தது. குறிப்பாக, இந்த சீசனில் பவர்பிளே எனப்படும் முதல் 6 ஓவர்களில் மட்டும் ராஜஸ்தான் அணி ஒட்டுமொத்தமாக 60 சிக்ஸர்களை விளாசி தள்ளியுள்ளது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் பவர்பிளேயில் 60 சிக்ஸர்களை அடித்த முதல் அணி என்ற சாதனையை ராஜஸ்தான் படைத்துள்ளது.

SRH

ஹைதராபாத் அணியின் அசுர சாதனை காலி

இதற்குமுன், கடந்த ஐபிஎல் 2024 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி பவர்பிளே ஓவர்களில் 59 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை ராஜஸ்தான் ராயல்ஸ் முறியடித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ்- 60 சிக்ஸர்கள் (2026) சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- 59 சிக்ஸர்கள் (2024) ராஜஸ்தான் ராயல்ஸ்- 57 சிக்ஸர்கள் (2025) 15 வயது இளம் புயல் வைபவ் சூரியவன்ஷியின் அதிரடி ஆட்டமே ராஜஸ்தான் இந்த மைல்கல்லை எட்ட முக்கியக் காரணமாக அமைந்தது.

LSG

லக்னோவின் போராட்டம் வீண்; ராஜஸ்தானின் பிளே-ஆஃப் கணக்கு

முன்னதாக, லக்னோ அணியில் மிட்செல் மார்ஷ் (96 ரன்கள்) மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் (60 ரன்கள்) ஆகியோரின் அதிரடியால் அந்த அணி 220 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணியில், ஜெய்ஸ்வால் 43 ரன்களும், வைபவ் சூரியவன்ஷி 38 பந்துகளில் 93 ரன்களும், துருவ் ஜூரெல் 53 ரன்களும் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அணியை வெற்றி பெறச் செய்தனர். வரும் மே 24 அன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றால், ராஜஸ்தான் ராயல்ஸ் அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும்.

Advertisement