
ஐபிஎல் 2025 : மெகா ஏலத்தில் அஸ்வின் மற்றும் முகமது ஷமியை கைப்பற்ற சிஎஸ்கே திட்டம்
செய்தி முன்னோட்டம்
வரவிருக்கும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில், அனைத்து அணிகளும் ஏல செயல்முறைக்கான தங்கள் தயாரிப்புகளை தொடங்கியுள்ளனர்.
ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைக்கப்பட வேண்டிய வீரர்களின் பட்டியலை இறுதி செய்வதோடு, ஏலத்தில் எடுப்பதற்கான வீரர்களின் விருப்பப்பட்டியலையும் தயார்செய்து வருகின்றனர்.
இதன்படி, ஐபிஎல் தொடரை ஐந்து முறை வென்று சாதனை படைத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), வரவிருக்கும் மெகா ஏலத்திற்கான விருப்பப்பட்டியலில் இரண்டு இந்திய வீரர்களை சேர்த்துள்ளது.
இதுதொடர்பாக வெளியான ஒரு அறிக்கையின்படி, போட்டிக்கான உரிமை அட்டை (ஆர்டிஎம்) கிடைக்காது என்றாலும், ஒவ்வொரு உரிமையாளருக்கும் ஐந்து தக்கவைப்புகளை வழங்க பிசிசிஐ விரும்புகிறது.
இதற்கிடையே, பல ஐபிஎல் உரிமையாளர்கள் ஐபிஎல் பங்குதாரர்களுக்கு இடையிலான சந்திப்பில் தங்கள் முக்கிய வீரர்களை அனுமதிக்குமாறு பிசிசிஐயிடம் வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைக்க விரும்பும் வீரர்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை, எம்எஸ் தோனி, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா மற்றும் பிற நட்சத்திரப் பெயர்களை உள்ளடக்கிய தங்கள் முக்கிய வீரர்களை தக்கவைக்க விரும்புகிறது.
மேலும், ஒரு அறிக்கையின்படி, வாய்ப்பு கிடைத்தால் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் முகமது ஷமி போன்றவர்களை தங்கள் அணியில் சேர்க்க சிஎஸ்கே விரும்புகிறது.
அனுபவம் வாய்ந்த இந்திய வீரர்களான அஸ்வின் மற்றும் ஷமியுடன் தங்கள் பந்துவீச்சு வரிசைக்கு மேலும் பலத்தை சேர்க்க சிஎஸ்கே விரும்புகிறது.
இருப்பினும் அவர்கள் இருவரையும் அந்தந்த அணி உரிமையாளர்கள் தக்கவைக்கவில்லை என்றால் மட்டுமே அது சாத்தியமாகும்.
முகமது ஷமி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தற்போது முறையே குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.