NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2025 மெகா ஏலம்: முதல் நாள் முடிவில் அணிகள் வாங்கிய வீரர்கள் மற்றும் பர்ஸில் உள்ள தொகை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் 2025 மெகா ஏலம்: முதல் நாள் முடிவில் அணிகள் வாங்கிய வீரர்கள் மற்றும் பர்ஸில் உள்ள தொகை
    ஐபிஎல் 2025 மெகா ஏலத்தின் முதல் நாள் முடிவில் அணிகள் வாங்கிய வீரர்கள்

    ஐபிஎல் 2025 மெகா ஏலம்: முதல் நாள் முடிவில் அணிகள் வாங்கிய வீரர்கள் மற்றும் பர்ஸில் உள்ள தொகை

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 25, 2024
    12:00 pm

    செய்தி முன்னோட்டம்

    சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடந்த ஐபிஎல் 2025 மெகா ஏலத்தின் பரபரப்பான முதல் நாளில் மொத்தம் 72 வீரர்கள் விற்கப்பட்டனர்.

    இதற்கிடையே, முதல் நாள் ஏலத்தில் ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டு, ரிஷப் பண்ட், ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போனவர் என்ற சாதனை படைத்துள்ளார்.

    இதேபோல், ஐபிஎல் 2024 பட்டம் வென்ற கேகேஆர் அணியின் முன்னாள் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் கிங்ஸால் ரூ.26.75 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

    மற்றொரு கேப்டனான கேஎல் ராகுலும் ஏலத்தில் களமிறங்கிய நிலையில், ரூ.14 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

    மெகா ஏலத்தின் முதல் நாளுக்குப் பிறகு அனைத்து 10 அணிகளின் வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:-

    சிஎஸ்கே

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    முதல் நாளில் வாங்கப்பட்ட வீரர்கள்: டெவான் கான்வே, ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திரா, ரவிச்சந்திரன் அஸ்வின், கலீல் அகமது, விஜய் சங்கர், நூர் அகமது.

    தக்கவைக்கப்பட்டவர்கள்: ருதுராஜ் கெய்க்வாட், மதீஷா பத்திரனா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி.

    பர்ஸில் மீதமுள்ள தொகை: ரூ.15.60 கோடி.

    காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை: 13 (4 வெளிநாட்டு வீரர்கள்).

    கேகேஆர்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 

    முதல் நாளில் வாங்கப்பட்ட வீரர்கள்: வெங்கடேஷ் ஐயர், குயின்டன் டி காக், ரஹ்மானுல்லா குர்பாஸ், அன்ரிச் நார்ட்ஜே, ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, வைபவ் அரோரா, மயங்க் மார்கண்டே.

    தக்கவைக்கப்பட்டவர்கள்: ரின்கு சிங், வருண் சகரவர்த்தி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரசல், ஹர்ஷித் ராணா, ரமன்தீப் சிங்.

    பர்ஸில் மீதமுள்ள தொகை: ரூ.10.05 கோடி.

    காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை: 12 (3 வெளிநாட்டு வீரர்கள்).

    எம்ஐ

    மும்பை இந்தியன்ஸ்

    முதல் நாளில் வாங்கப்பட்ட வீரர்கள்: டிரென்ட் போல்ட், நமன் திர், ராபின் மின்ஸ், கர்ன் ஷர்மா.

    தக்கவைக்கப்பட்டவர்கள்: ஜஸ்ப்ரீத் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரோஹித் ஷர்மா, திலக் வர்மா.

    பர்ஸில் மீதமுள்ள தொகை: ரூ.26.10 கோடி.

    காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை: 16 (7 வெளிநாட்டு வீரர்கள்).

    பிபிகேஎஸ்

    பஞ்சாப் கிங்ஸ்

    முதல் நாளில் வாங்கப்பட்ட வீரர்கள்: ஷ்ரேயாஸ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், கிளென் மேக்ஸ்வெல், ஹர்பிரீத் பிரார், விஜய்குமார் வைஷாக், யாஷ் தாக்கூர்.

    தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ஷஷாங்க் சிங், பிரப்சிம்ரன் சிங்.

    பர்ஸில் மீதமுள்ள தொகை: ரூ.22.50 கோடி.

    காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை: 13 (6 வெளிநாட்டு வீரர்கள்).

    ஜிடி

    குஜராத் டைட்டன்ஸ்

    முதல் நாளில் வாங்கப்பட்ட வீரர்கள்: ஜோஸ் பட்லர், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மஹிபால் லோம்ரோர், குமார் குஷாக்ரா, நிஷாந்த் சிந்து, அனுஜ் ராவத், மானவ் சுதர்.

    தக்கவைக்கப்பட்டவர்கள்: ரஷித் கான், ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ராகுல் தெவாடியா, ஷாருக் கான்.

    பர்ஸில் மீதமுள்ள தொகை: ரூ.17.50 கோடி.

    காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை: 11 (5 வெளிநாட்டு வீரர்கள்).

    ஆர்ஆர்

    ராஜஸ்தான் ராயல்ஸ்

    முதல் நாளில் வாங்கப்பட்ட வீரர்கள்: ஜோஃப்ரா ஆர்ச்சர், வைனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷனா, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேய சிங்.

    தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், சந்தீப் சர்மா.

    பர்ஸில் மீதமுள்ள தொகை: ரூ.17.30 கோடி.

    காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை: 14 (4 வெளிநாட்டு வீரர்கள்).

    ஆர்சிபி

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    முதல் நாளில் வாங்கப்பட்ட வீரர்கள்: லியாம் லிவிங்ஸ்டோன், பில் சால்ட், ஜிதேஷ் ஷர்மா, ஜோஷ் ஹேசில்வுட், ரசிக் தார், சுயாஷ் ஷர்மா.

    தக்கவைக்கப்பட்டவர்கள்: விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள்.

    பர்ஸில் மீதமுள்ள தொகை: ரூ.30.65 கோடி.

    காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை: 16 (5 வெளிநாட்டு வீரர்கள்).

    எஸ்ஆர்எச்

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

    முதல் நாளில் வாங்கப்பட்ட வீரர்கள்: இஷான் கிஷன், முகமது ஷமி, ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர், ஆடம் ஜம்பா, அதர்வா டைடே, அபினவ் மனோகர், சிமர்ஜீத் சிங்.

    தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் ரெட்டி.

    பர்ஸில் மீதமுள்ள தொகை: ரூ.5.15 கோடி.

    காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை: 12 (4 வெளிநாட்டு வீரர்கள்).

    டிசி

    டெல்லி கேப்பிடல்ஸ்

    முதல் நாளில் வாங்கப்பட்ட வீரர்கள்: கே.எல்.ராகுல், ஹாரி புரூக், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், கருண் நாயர், டி நடராஜன், மிட்செல் ஸ்டார்க், சமீர் ரிஸ்வி, அசுதோஷ் சர்மா, மோஹித் சர்மா.

    தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: அபிஷேக் போரல், டிரிஸ்டியன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், குல்தீப் யாதவ்.

    பர்ஸில் மீதமுள்ள தொகை: ரூ.13.80 கோடி.

    காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை: 12 (4 வெளிநாட்டு வீரர்கள்).

    எல்எஸ்ஜி

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

    முதல் நாளில் வாங்கப்பட்ட வீரர்கள்: ரிஷப் பண்ட், டேவிட் மில்லர், ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், அவேஷ் கான், அப்துல் சமத், ஆர்யன் ஜூயல்.

    தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: நிக்கோலஸ் பூரன், மயங்க் யாதவ், மொஹ்சின் கான், ரவி பிஸ்னாய்.

    பர்ஸில் மீதமுள்ள தொகை: ரூ.14.85 கோடி.

    காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை: 13 (4 வெளிநாட்டு வீரர்கள்).

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல் 2025
    ஐபிஎல்
    சென்னை சூப்பர் கிங்ஸ்
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    ஐபிஎல் 2025

    விசில் போடு! டுவைன் பிராவோ கேகேஆர் அணியில் இணைவது குறித்து எக்ஸ் தளத்தில் சிஎஸ்கே பதிவு ஐபிஎல்
    ஐபிஎல் 2025: மெகா ஏலத்திற்கான தக்கவைப்பு விதிகள் வெளியானது; புதிய அம்சங்கள் என்ன?  ஐபிஎல்
    சிஎஸ்கே அணியில் இடம்பெறுவது உறுதி; எம்எஸ் தோனிக்காக ஐபிஎல் நிர்வாகம் செய்த அதிரடி மாற்றம் எம்எஸ் தோனி
    ஐபிஎல் வரலாற்றில் புதிய அத்தியாயம்; வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தை அறிவித்தது பிசிசிஐ ஐபிஎல்

    ஐபிஎல்

    ஐபிஎல் 2025 : மெகா ஏலத்தில் அஸ்வின் மற்றும் முகமது ஷமியை கைப்பற்ற சிஎஸ்கே திட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்தார் சிஎஸ்கே பந்துவீச்சு பயிற்சியாளர் டுவைன் பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஆர்சிபி போட்டிக்கு பின்னர் எம்எஸ் தோனி டிவியை உடைக்கவில்லை; சிஎஸ்கே பீல்டிங் பயிற்சியாளர் உறுதி எம்எஸ் தோனி
    நம்ம எம்எஸ் தோனியா இது? கலக்கலான ஹேர்ஸ்டைலுடன் ஆளே மாறிப் போயிட்டாரே! எம்எஸ் தோனி

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    மே 1ம் தேதி வரை சிஎஸ்கே அணிக்காக விளையாட வருகிறார் வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் சிஎஸ்கே
    CSK-க்கு பலத்த அடி, IPL 2024ல் இருந்து விலகிய நட்சத்திர வீரர் சிஎஸ்கே
    தீபக் சாஹரின் காயம் குறித்து சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஃப்ளெமிங் தகவல் சிஎஸ்கே
    புதிய ஐபிஎல் சாதனையை படைத்த எம்.எஸ். தோனி: 150 வெற்றிகளை படைத்த முதல் வீரர் எம்எஸ் தோனி

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    ஆர்சிபி vs எல்எஸ்ஜி : டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்! முதலில் பேட்டிங் செய்ய முடிவு! ஐபிஎல்
    ஆர்சிபி vs எல்எஸ்ஜி : காயத்தால் பாதியில் வெளியேறிய கே.எல்.ராகுல்! எல்எஸ்ஜி அணியின் கேப்டனாக செயல்படும் க்ருனால் பாண்டியா! லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
    இது இரண்டாவது முறை! மிகக்குறைந்த ரன்களை இலக்காக வைத்து வெற்றி பெற்று ஆர்சிபி சாதனை! லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
    மைதானத்தில் மோதிக்கொண்ட விராட் கோலி - கவுதம் கம்பீர்! பிசிசிஐ அதிரடி நடவடிக்கை! விராட் கோலி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025