ஐபிஎல் 2025: அனைத்து அணிகளின் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியல்
ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக, ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைக்கும் வீர்களின் பட்டியலை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு வியாழக்கிழமையுடன் (அக்டோபர் 31) நிறைவடைந்தது. இதையொட்டி, ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு:- சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே): எம்எஸ் தோனி (4 கோடி), ரவீந்திர ஜடேஜா (18 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (18 கோடி), ஷிவம் துபே (12 கோடி), மதீஷா பத்திரனா (13 கோடி). ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி): விராட் கோலி (21 கோடி), யாஷ் தயாள் (5 கோடி), ரஜத் படிதார் (11 கோடி).
தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்
குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி): ஷுப்மன் கில் (16.5 கோடி), ரஷித் கான் (18 கோடி), பி சாய் சுதர்சன் (8.5 கோடி), ராகுல் தீவட்டியா (நான்கு கோடி), ஷாருக் கான் (4 கோடி). கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்): சுனில் நரைன் (12 கோடி), ரின்கு சிங் (13 கோடி), ஹர்ஷித் ராணா (4 கோடி), ஆண்ட்ரே ரசல் (12 கோடி), ரமன்தீப் சிங் (4 கோடி), வருண் சக்ரவர்த்தி (12 கோடி). சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்): ஹென்ரிச் கிளாசென் (23 கோடி), பாட் கம்மின்ஸ் (18 கோடி), அபிஷேக் ஷர்மா (14 கோடி), டிராவிஸ் ஹெட் (14 கோடி), நிதிஷ் குமார் ரெட்டி (6 கோடி).
தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்
டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி): அக்சர் படேல் (16.5 கோடி), குல்தீப் யாதவ் (13.25 கோடி), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (10 கோடி), அபிஷேக் போரல் (4 கோடி). ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்): சஞ்சு சாம்சன் (18 கோடி), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (18 கோடி), ரியான் பராக் (14 கோடி), துருவ் ஜூரல் (14 கோடி), ஷிம்ரோன் ஹெட்மியர் (11 கோடி), சந்தீப் ஷர்மா (4 கோடி). லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி): நிக்கோலஸ் பூரன் (21 கோடி), மயங்க் யாதவ் (11 கோடி), ரவி பிஷ்னோய் (11 கோடி), மொஹ்சின் கான் (4 கோடி), ஆயுஷ் படோனி (4 கோடி).
தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்
பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்): ஷஷாங்க் சிங் (5.5 கோடி), பிரப்சிம்ரன் சிங் (4 கோடி). மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ): ஜஸ்ப்ரீத் பும்ரா (18 கோடி), சூர்யகுமார் யாதவ் (16.35 கோடி), ஹர்திக் பாண்டியா (16.35 கோடி), ரோஹித் ஷர்மா (16.30 கோடி), திலக் வர்மா (8 கோடி).