
RCB அணி பெயர் மாற்றம்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என மாற்றம்
செய்தி முன்னோட்டம்
முன்னதாக நமது தமிழ் நியூஸ்பைட்ஸ்-இல் குறிப்பிட்டிருந்ததை போலவே, RCB அணியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
அந்த அணியின் அன்பாக்ஸ் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அப்போது இதுநாள் வரை இருந்த அணியின் பெயரான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற பெயரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என மாற்றி உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதோடு இந்த அணிக்கான புதிய ஜெர்சியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஆர்சிபி அணியின் கேப்டன் கோலி உட்பட அணியின் அனைத்து வீரர்களும் பங்கேற்றனர். கூடுதலாக இந்த நிகழ்ச்சியில் விராட் கோலி கன்னட மொழியில் பேசி அசத்தினார்.
அப்போது பேசிய கோலி தன்னை யாரும் 'கிங் கோலி' என அழைக்க வேண்டாம் எனவும், அது தனக்கு சங்கோஜத்தை வரவழைப்பதால், விராட் என்றே குறிப்பிடுமாறு ரசிகர்களை கேட்டுக்கொண்டார்.
embed
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
The City we love, the Heritage we embrace, and this is the time for our ಹೊಸ ಅಧ್ಯಾಯ. PRESENTING TO YOU, ROYAL CHALLENGERS BENGALURU, ನಿಮ್ಮ ತಂಡ, ನಿಮ್ಮ RCB!#PlayBold #ನಮ್ಮRCB #RCBUnbox pic.twitter.com/harurFXclC— Royal Challengers Bangalore (@RCBTweets) March 19, 2024
embed
கன்னடத்தில் பேசி கலக்கிய கோலி
ಇದು #RCB ಯ ಹೊಸ ಅಧ್ಯಾಯ This Is New Chapter Of RCB pic.twitter.com/sA4YRfXgjC— PRASHANTH CB (@ThePrashanthCB) March 19, 2024