ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகிறார் ஹர்திக் பாண்டியா
இந்தியன் பிரிமியர் லீக் என்றழைக்கப்படும் ஐபிஎல் போட்டிகளின் 17வது சீசன் வரும் 2024ஆம் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான ஏலம் அண்மையில் முடிவடைந்தது. கடந்த சில சீன்களில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஹர்திக் பாண்டியா, இந்தாண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற விருப்பம் தெரிவித்து, இந்த அணியில் சேர்க்கப்பட்டார். இந்த சூழலில், 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பொறுப்பில் இருந்த ரோஹித் ஷர்மாவிற்கு பதிலாக, தற்போது ஹர்திக் பாண்டியா, அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணியானது டிரேட் முறையில் ரூ.15 கோடிக்கு வாங்கிக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.