ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் இன்று மோதல்
2024 ஆண்டுக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளன. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆர்வத்தோடு குவிந்து வருகின்றனர். முன்னதாக ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான CSK அணி தொடர்ச்சியாக இரு வெற்றிகளை பெற்று புள்ளிபட்டியலில் முதலில் இருந்தது. இருப்பினும், கடந்த போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால், 4 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தில் சிஎஸ்கே அணி உள்ளது. மறுபுறம் சன்ரைசர்ஸ் அணி, 2 தோல்விகளையும், ஒரு வெற்றியையும் பெற்றுள்ளது. அதனால் இப்போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது
ஹைதராபாத்திற்கு வந்திறங்கிய CSK அணி
MS Dhoni Arrived🛬 At Hyderabad 🏟️#SRHvsCSK #หลานม่า #Thala pic.twitter.com/E3bnTy4GdT— Cricket Alert📢 (@CricketAlert110) April 5, 2024