Page Loader
ஐபிஎல் 2023 : விராட் கோலிக்கு 10% அபராதம் விதிப்பு
விராட் கோலிக்கு 10% அபராதம் விதிப்பு

ஐபிஎல் 2023 : விராட் கோலிக்கு 10% அபராதம் விதிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Apr 18, 2023
07:57 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2023 சென்னை சூப்பர் கிங்ஸ் ((சிஎஸ்கே) அணிக்கு எதிராக பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் திங்கள்கிழமை (ஏப்ரல் 18) நடந்த மோதலுக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு அவரது போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. ஐபிஎல் நடத்தை விதிகள் 2.2 இன் கீழ் லெவல் 1 குற்றத்தை கோலி ஒப்புக்கொண்டார் என்று ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஐபிஎல் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், "சிஎஸ்கேவுக்கு எதிரான ஐபிஎல் 2023 போட்டியின் போது ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) பேட்டர் விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது." என்று கூறியுள்ளது.

reason behind fine for virat kohli

அபராதம் விதிக்கப்பட்டதற்கான காரணம் என்ன?

ஐபிஎல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்படவில்லை என்றாலும், சிஎஸ்கே வீரர் சிவம் துபே வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து கோலியின் ஆக்ரோஷமான கொண்டாட்டங்களின் காரணமாக அபராதம் விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிவம் துபே 26 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆர்சிபி வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பார்னெலால் ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹிருத்திக் ஷோக்கீனுக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுடன் களத்தில் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு இதே போன்ற அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.