அடுத்த செய்திக் கட்டுரை

ஐபிஎல்லில் நான்கு ஆண்டுகளில் முதல் சதம்! கோலியின் ருத்ர தாண்டவம்! கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்!
எழுதியவர்
Sekar Chinnappan
May 19, 2023
11:37 am
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023 இல் வியாழக்கிழமை (மே 18) இரவு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விராட் கோலி தனது ஆறாவது சதத்தை அடித்தார்.
ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் விளையாடிய கோலி 63 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 100 ரன்கள் எடுத்தார்.
இருப்பினும், அவர் 100 ரன்களை எட்டியவுடன், கிளென் பிலிப்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதன் மூலம் ஐபிஎல்லில் கடந்த நான்கு ஆண்டுகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்ததோடு, ஐபிஎல்லில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற கிறிஸ் கெய்லின் சாதனையையும் கோலி சமன் செய்தார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு கோலியின் சதத்தை கண்டா ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
The historic moment.
— Johns. (@CricCrazyJohns) May 18, 2023
6th IPL century for Virat Kohli.pic.twitter.com/T4sUkYfdf2