NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 2036 ஒலிம்பிக் இந்தியாவில் நடக்குமா? 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடக்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    2036 ஒலிம்பிக் இந்தியாவில் நடக்குமா? 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடக்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டம்!
    40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடக்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டம்

    2036 ஒலிம்பிக் இந்தியாவில் நடக்குமா? 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடக்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டம்!

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 07, 2023
    11:19 am

    செய்தி முன்னோட்டம்

    சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) திங்களன்று (மார்ச் 6) 140 வது ஐஓசி அமர்வு மும்பையில் அக்டோபர் 15 முதல் 17 வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

    ஐஓசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, ஐஓசி அமர்வுக்கு முன்னதாக அக்டோபர் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் ஐஓசி நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறும் என்றும், ஐஓசி அமர்வின் தொடக்க விழா அக்டோபர் 14 ஆம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிப்ரவரி 2022 இல் பெய்ஜிங்கில் நடைபெற்ற 139வது அமர்வின் போது 140வது ஐஓசி அமர்வை இந்தியாவில் நடத்துவதற்கான முடிவு அதன் உறுப்பினர்களால் எடுக்கப்பட்டது.

    75 உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாகவும் ஒருவர் எதிராகவும் வாக்களித்ததை அடுத்து, நிகழ்வை நடத்துவதற்கான முயற்சியில் இந்தியா வெற்றி பெற்றது.

    சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி

    கூட்டத்தில் விவாதிக்கப்படும் அம்சங்கள்

    1983 ஆம் ஆண்டு புதுடெல்லியில் 86வது பதிப்பு கூட்டம் நடைபெற்ற நிலையில், அதன் பிறகு 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஐஓசி அமர்வு மீண்டும் இந்தியாவில் நடக்க உள்ளது.

    ஐஓசி அமர்வு, அதன் உறுப்பினர்களின் பொதுக் கூட்டம், வருடத்திற்கு ஒரு முறையாவது நடைபெறும்.

    இதில் வரவிருக்கும் நிகழ்வுகள், விளையாட்டுத் துறைகள் அல்லது சர்வதேச கூட்டமைப்புகளைச் சேர்ப்பது அல்லது விலக்குவது மற்றும் அதன் ஒலிம்பிக் சாசனத்தில் மாற்றங்கள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நகரங்களைத் தீர்மானிப்பது போன்றவை விவாதிக்கப்படும்.

    2036 ஒலிம்பிக்கை இந்தியா நடத்த விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், ஐஓசி அமர்வில் இது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய அணி
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்திய அணி

    நியூசிலாந்திடம் தோல்வி! ஹாக்கி உலகக்கோப்பையிலிருந்து வெளியேறியது இந்தியா! ஹாக்கி போட்டி
    ஒருநாள் போட்டிகளில் அதிக சராசரி! சாதனை நாயகன் ஷுப்மன் கில்! கிரிக்கெட்
    ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம்! மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியா வெற்றி! பெண்கள் கிரிக்கெட்
    முதல் விக்கெட்டுக்கு 212 ரன்கள்! நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோஹித்-ஷுப்மன் ஜோடி அபாரம்! ரோஹித் ஷர்மா

    இந்தியா

    ChatGPT-யில் வேலை இழப்பு? தைரியம் சொன்ன Infosys நிறுவனர்! சாட்ஜிபிடி
    இனி UPI PIN இல்லாமல் பணம் அனுப்பலாம்! Paytm புதிய வசதி அறிமுகம் தொழில்நுட்பம்
    தங்கம் விலையில் அதிரடி மாற்றம் - இன்றைய நாளில் எவ்வளவு சரிவு? தங்கம் வெள்ளி விலை
    குவாட் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் வெளியுறவுத்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025