INDvsSL ஒருநாள் உலகக்கோப்பை : இந்திய அணியின் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11
வியாழக்கிழமை (நவ.2) நடக்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன. முன்னதாக, 2011 ஏப்ரலில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்ற 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மும்பை வான்கடே மைதானத்தில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. முந்தைய உலகக் கோப்பை இறுதிப் போட்டி மிகவும் பரபரப்பாக இருந்த நிலையில், இந்த போட்டியில் அப்படி எதுவும் இருக்காது எனக் கூறப்படுகிறது. இந்தியா இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய நிலையில், இலங்கை வெற்றிகளை விட தோல்விகளையே அதிகமாக கொண்டுள்ளது. ஹர்திக் பாண்டியா இல்லாதது அணிக்கு பின்னடைவாக இருந்தபோதும், முகமது ஷமி அந்த நிவர்த்தி செய்து வருகிறார்.
பேட்டிங்கில் மாற்றம் இருக்குமா?
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை ஷுப்மன் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் வலுவான ஒரு நாள் சாதனைகளுடன் உலகக்கோப்பையில் களமிறங்கினாலும், இன்னும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் பேட்டிங் ஆர்டரில் சிறிய அளவில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டாலும், விளையாடும் 11'ஐ மாற்ற அணி நிர்வாகம் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தியாவின் எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன் : ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி.