Ind vs Pak ஆசிய கோப்பை: 357 என பாக்.,கிற்கு இலக்கை நிர்ணயித்தது இந்தியா
ஆசிய கோப்பைத் தொடரில் சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது போட்டியில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய நிலையில், மழை காரணமாக போட்டி இடையிலேயே நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி, ரிசர்வ் நாளான இன்று போட்டி விட்ட இடத்திலிருந்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதாவது, நேற்று ஆட்டத்தின் இறுதியில், 24.1 ஓவர்கள் மட்டுமே வீசியதால், இந்தியா 147/2 என்ற நிலையில் இருந்தது. இந்த நிலையில், இன்று மாலை, 4:40 க்கு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. ஆட்டத்தின் இறுதியில், இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்து, 356 ரன்கள் பெற்றிருந்தது. களத்தில், விராட் கோலி (122) ரன்கள் பெற்றும், KL ராகுல் (111) பெற்றும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
Ind vs Pak
Innings Break! A brilliant opening partnership between @ImRo45 & @ShubmanGill, followed by a stupendous 233* run partnership between @imVkohli & @klrahul as #TeamIndia post a total of 356/2 on the board. Scorecard - https://t.co/kg7Sh2t5pM... #INDvPAK pic.twitter.com/2eu66WTKqz— BCCI (@BCCI) September 11, 2023