INDvsNZ : இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான முகமது ஷமியை பாராட்டிய பிரதமர் மோடி
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்த முகமது ஷமியை தனியாக குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இன்றைய அரையிறுதியானது சிறப்பான தனிப்பட்ட ஆட்டத்திறனுக்காக மேலும் சிறப்பாக அமைந்தது. இந்த ஆட்டத்திலும், உலகக் கோப்பையிலும் முகமது ஷமியின் பந்துவீச்சு கிரிக்கெட் பிரியர்களால் தலைமுறை தலைமுறையாகப் போற்றப்படும்." எனத் தெரிவித்துள்ளார். தன்னை பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமருக்கு நன்றி தெரிவித்து முகமது ஷமியும் பதில் கொடுத்துள்ளார்.