Page Loader
இந்திய அணியின் கேப்டனாக 100வது போட்டி; புதிய சாதனைக்கு தயாராகும் ரோஹித் ஷர்மா
இந்திய அணியின் கேப்டனாக 100வது போட்டியில் விளையாடும் ரோஹித் ஷர்மா

இந்திய அணியின் கேப்டனாக 100வது போட்டி; புதிய சாதனைக்கு தயாராகும் ரோஹித் ஷர்மா

எழுதியவர் Sekar Chinnappan
Oct 29, 2023
10:43 am

செய்தி முன்னோட்டம்

ஒருநாள் உலகக்கோப்பையில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) நடக்கும் லீக் போட்டியில் பங்கேற்பதன் மூலம், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா தனது 100வது போட்டி எனும் மைல்கல்லை எட்ட உள்ளார். லக்னோவில் நடக்கும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை அவரது தலைமையிலான இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது. இதற்கிடையே, கேப்டனாக 100 போட்டிகள் எனும் மைல்கல்லை எட்டும் ஏழாவது இந்திய கேப்டன் என்ற சிறப்பை ரோஹித் ஷர்மா பெறுகிறார். இந்த பட்டியலில் தோனி (332) முதலிடத்தில் உள்ள நிலையில், முகமது அசாருதீன் (221), விராட் கோலி (213), சவுரவ் கங்குலி (196), கபில்தேவ் (108), ராகுல் டிராவிட் (104) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Rohit Sharma set to reach 100th match as captain of India

இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மாவின் புள்ளி விபரம்

ரோஹித் ஷர்மா 2017 ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக முதன்முதலில் அணியை வழிநடத்தும் வாய்ப்பை பெற்றார். அதன் பின்னர் 2021இல் இருந்து அணியின் நிரந்தர கேப்டனாக மாறிய ரோஹித் ஷர்மா, ஒன்பது டெஸ்ட், 39 ஒருநாள் மற்றும் 51 டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளார். 2023 கேப்டன்சியில் அவருக்கு வெற்றிகரமான ஆண்டாக மாறியுள்ளது. முன்னதாக, சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பையை அவரது தலைமையிலான அணி வென்றது. மேலும், தற்போது நடந்து வரும் ஒருநாள் உலகக்கோப்பையில் இதுவரை தோல்வியே கண்டிராத ஒரே அணியாக ரோஹித் ஷர்மாவின் அணி மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.