Page Loader
INDvsBAN : இந்தியாவுக்கு 257 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது வங்கதேசம்
இந்தியாவுக்கு 257 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது வங்கதேசம்

INDvsBAN : இந்தியாவுக்கு 257 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது வங்கதேசம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 19, 2023
06:27 pm

செய்தி முன்னோட்டம்

வியாழக்கிழமை (அக்டோபர் 19) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு 257 ரன்களை வெற்றி இலக்காக வங்கதேசம் நிர்ணயித்துள்ளது. முன்னதாக, டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டான்சித் ஹசன் (51) மற்றும் லிட்டன் தாஸ் (66) ஆகிய இருவரும் வலுவான தொடக்கத்தை அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். எனினும், அதன் பின்னர் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியதால், வங்கதேசம் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் சிறப்பாக பும்ரா, சிராஜ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ட்விட்டர் அஞ்சல்

இந்தியாவுக்கு 257 ரன்கள் இலக்கு நிர்ணயம்