NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஐசிசி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்தியா
    விளையாட்டு

    20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஐசிசி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்தியா

    20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஐசிசி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்தியா
    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 13, 2023, 06:42 pm 1 நிமிட வாசிப்பு
    20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஐசிசி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்தியா
    20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஐசிசி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்தியா

    ஆடவர் கிரிக்கெட்டில் சரியாக 20 வருடங்களுக்கு பிறகு இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் ஐசிசி நடத்தும் தொடரின் இறுதிப் போட்டியில் நேரடியாக மோத உள்ளன. கடைசியாக 2003 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 359 ரன்கள் குவித்தது. 360 ரன்கள் எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 39.2 ஓவர்களில் 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

    2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

    2003க்கு பிறகு 2023 ஆம் ஆண்டில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டி இங்கிலாந்தின் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 7 ஆம் தேதி தொடங்க உள்ளது. ஜூன் 12ஆம் தேதி இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ரிசர்வ் தினமாகும். முன்னதாக, 2021 இல் நடந்த முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியிலும் விளையாடியுள்ள இந்திய அணி, நியூஸிலாந்திடம் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    கிரிக்கெட்
    ஐசிசி
    டெஸ்ட் சாம்பியன்ஷிப்

    கிரிக்கெட்

    தேசிய கிரிக்கெட் அகாடெமியில் இணைந்தார் ரிஷப் பந்த்! விரைவில் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு! கிரிக்கெட் செய்திகள்
    'முழுக்க முழுக்க தோனிக்காக மட்டுமே' : வைரலாகும் ரவீந்திர ஜடேஜாவின் ட்வீட்! ரவீந்திர ஜடேஜா
    'புகையிலை விளம்பரத்தில் நடிக்காததற்கு காரணம் இது தான்' : சச்சின் டெண்டுல்கர் சச்சின் டெண்டுல்கர்
    ஐபிஎல் 2023 சீசனில் முறியடிக்கப்பட்ட முக்கிய சாதனைகள்! ஐபிஎல்

    ஐசிசி

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெறும் அணிக்கு ரூ,13.22 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு! டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்ட பிரபல வெஸ்ட் இண்டீஸ் வீரர் இடைநீக்கம்! வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி
    ஒருநாள் உலகக்கோப்பை 2023 தகுதிச்சுற்றுக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி! ஒருநாள் கிரிக்கெட்
    2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்? இந்தியாவை காட்டி பேரம் பேசும் ஐசிசி! ஒலிம்பிக்

    டெஸ்ட் சாம்பியன்ஷிப்

    'விரைவில் இந்திய அணியில் ரிங்கு சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இடம்' : எம்எஸ்கே பிரசாத் இந்திய அணி
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: முன்கூட்டியே இங்கிலாந்து கிளம்பும் இந்திய வீரர்கள் டெஸ்ட் மேட்ச்
    'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சூர்யகுமார் யாதவ் இல்லாதது ஆச்சரியமளிக்கிறது' : ரிக்கி பாண்டிங் டெஸ்ட் மேட்ச்
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 : இந்திய அணியின் மேலாளராக அனில் படேல் நியமனம் டெஸ்ட் மேட்ச்

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023