LOADING...
ஆசிய கோப்பையில் இந்திய ஹாக்கி அணி அடுத்தடுத்து வெற்றி; சூப்பர் ஃபோர் சுற்றுக்குத் தகுதி
ஆசிய கோப்பையில் இந்திய ஹாக்கி அணி அடுத்தடுத்து வெற்றி

ஆசிய கோப்பையில் இந்திய ஹாக்கி அணி அடுத்தடுத்து வெற்றி; சூப்பர் ஃபோர் சுற்றுக்குத் தகுதி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 31, 2025
05:53 pm

செய்தி முன்னோட்டம்

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் இரண்டாவது போட்டியில் ஜப்பானை எதிர்கொண்ட இந்திய ஹாக்கி அணி, 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் ஃபோர் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்த விறுவிறுப்பான போட்டியில் ஹர்மன்பிரீத் சிங் இரண்டு கோல்களும், ராஜ் குமார் பால் ஒரு கோலும் அடித்தனர். சீனாவுக்கு எதிரான முதல் போட்டியைப் போல அல்லாமல், இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் முதல் சுற்றிலிருந்தே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

நெருக்கடி

ஜப்பானின் நெருக்கடியை தவிடுபொடியாக்கி வெற்றி

எனினும், ஆட்டம் செல்லச் செல்ல, குறிப்பாகக் கடைசி சுற்றில், இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் இரண்டு நிமிட இடைநீக்கம் காரணமாகக் களத்திற்கு வெளியே இருந்தபோது, ஜப்பான் அணி இந்தியாவிற்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தது. முதல் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த ஹர்மன்பிரீத் சிங், இந்தப் போட்டியிலும் சிறப்பாகச் செயல்பட்டு, இரண்டு பெனால்டி கார்னர் கோல்களை அடித்து அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தார். இந்திய ஹாக்கி அணி இந்தப் போட்டியில், மைதானத்தில் ஒரு கோல் அடித்து மகிழ்ச்சியடைந்தது, அந்த கோலை மந்தீப் சிங் அடித்தார். இதன் மூலம் ஆசிய கோப்பைக்கான சூப்பர் ஃபோர் சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.